புதுதில்லி, ஜூன் 5-முப்படைத் தளபதிகள் நியமனக் குழுவில் முன்னாள்தளபதிகளை இடம் பெறச்செய்யுமாறு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் விமானப்படை முன்னாள் தளபதி பி.வி.நாயக் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் தகுதி சார்ந்த தேர்வை யாரும் மறுக்கப்போவதில்லை என்ற போதும்தகுதியை தீர்மானிப்பது பாதுகாப்பு அமைச்சரா, பிரதமர் அலுவலகமா, அல்லது தேசிய பாதுகாப்பு ஆலோசகரா என கேள்விஎழுப்பியுள்ளார். இவர்கள் அனைவரும் அதிகாரிகள் தொடர்பான புறச்சார் தகவல்களை சார்ந்தவர்கள் என்றும் பாதுகாப்புத்துறையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு திறமை சார்ந்ததலைமைகள் அவசியம் என்றும் கூறியுள்ளார். முக்கிய முடிவுகளை எடுப்பதில் பாதுகாப்பு அமைச்சகத்தில் ஆயுதப்படைகளுக்கு பங்களிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.