tamilnadu

img

தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதில் சமரசம் கிடையாது

புதுதில்லி:
கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொழிலாளர்களின் குரலை நசுக்குவதற்கு காரணமாக அமைந்து விடக் கூடாதென காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சில மாநிலங்கள் தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்துள்ளது என ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப்பிதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளன. குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் அடுத்தமூன்றாண்டுகளுக்கு  அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது: தொழிலாளர் சட்டங்கள் பல மாநிலங்களால் திருத்தப்படுகின்றன. கொரோனா தொற்றுக்கு எதிராக நாங்கள் ஒன்றாகப் போராடுகிறோம். ஆனால் மனித உரிமைகளை மிதிப்பதற்கும், பாது காப்பற்ற பணியிடங்களை அனுமதிப்பதற்கும், தொழிலாளர்களை சுரண்டுவதற்கும் அவர்களின் குரல்களை அடக்குவதற்கும் அனுமதிக்க முடியாது. தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அடிப்படைக் கொள்கைகளில் நாங்கள் சமரசம் செய்ய முடியாது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

;