tamilnadu

img

பி.எம். கேர்ஸ் பற்றி பதில் அளித்துத்தான் ஆக வேண்டும்.... முன்னாள் தகவல் ஆணையர் கருத்து

புதுதில்லி:
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், ‘பிஎம் கேர்ஸ்’ நிதி குறித்துகேட்கப்பட்ட தகவல்களுக்கு மத்திய அரசுபதிலளித்துத்தான் ஆக வேண்டும் என்றுநாட்டின் முதல் தகவல் ஆணையரான வஜாஹத் ஹபிபுல்லா தெரிவித்துள்ளார்.

பிரதமர் நிவாரண நிதியம் என்றஅமைப்பு நீண்ட காலமாக இருக்கும் போது, கொரோனாவையொட்டி, பிரதமர்மோடி ஏற்படுத்திய ‘பிஎம்- கேர்ஸ்’ என்றஅறக்கட்டளை, சர்ச்சைகளை ஏற்படுத்தியது. திடீரென புதிய அமைப்பை துவங்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி கள் எழுந்ததுடன், பி.எம். கேர்ஸில் வசூலான நன்கொடை எவ்வளவு; அவைஎந்தெந்த வகைகளில் செலவு செய்யப் பட்டுள்ளன? என்ற விவரங்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தகவல் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழும் மனுக்களும் அனுப்பப்பட்டன. ஆனால், ‘பி.எம். கேர்ஸ்’ ஆர்டிஐ சட்ட வரம்புக்குள் வராது என்றுபிரதமர் அலுவலகம் கூறி விட்டது. எனினும் வேறு பல வகைகளில் பி.எம். கேர்ஸ் தொடர்பான உண்மைகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், பிஎம் கேர்ஸ் குறித்து,பிரதமர் அலுவலகம் பதிலளிக்க மறுத் தது, ‘ஆர்டிஐ சட்டத்தின் விதிகளுக்கு முரணான செயல்’ என்று நாட்டின் முதல்மத்திய தகவல் ஆணையராக பணியாற் றிய வஜாஹத் ஹபிபுல்லா அண்மையில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.“ஆர்டிஐ சட்டத்தைப் பொறுத்தவரை, வழங்கும் தகவலின் வடிவத்தை மாற்றலாமே ஒழிய, முற்றிலும் மறுக்கக்கூடாது. அப்படி மறுத்தால் அதற்கு அபராதம் விதிக்கலாம் என்பது நீதிமன்றத்தீர்ப்பு. அந்த வகையில் பிரதமர் அலுவலகம் சட்டப்படி தவறிழைத்துள்ளது மற்றும் அந்த சட்டத்தை தவறாகவும் பயன்படுத்தியுள்ளது” என்று வஜாஹத் ஹபிபுல்லா தெரிவித்துள்ளார்.