இந்திய விண்வெளி ஆராய்ச்சிநிறுவனமான இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது.
*****************
ஆண், பெண் பாலின இடைவெளியை முடிவுக்கு கொண்டு வரும் போராட்டத்தை நடத்தி வரும் பின்லாந்து பெண் பிரதமர் சன்னா மரின், 16 வயது சிறுமியான ஆவா முர்டோ என்பவரை அந்நாட்டின் ‘ஒரு நாள்’ பிரதமராக பொறுப்பில் அமர்த்தினார். அக்டோபர் 11 சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆவா முர்டோ ஒரு நாள் பிரதமர் பதவியை வகித்தார்.
*****************
சென்னை மாநகரம் முழுவதும் வாகனங்களில் செல்லும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகர போக்குவரத்து காவல்துறை கட்டாயமாக்கியுள்ளது.
*****************
கைவிரல் ரேகையை அங்கீகரிக்க முடியவில்லை என்ற காரணத்துக்காக யாருக்கும், ரேசன் பொருட்கள் வழங்காமல் இருந்து விடக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
*****************
ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
*****************
புதுச்சேரி மாநிலத்தில் பணிபுரியும் 20 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன.