சினாவில் கோவிட்-19 நோய் அடையாளம் காணப்படுவதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னர், 2019 மார்ச் மாதத்தில் சேகரிக்கப்பட்ட பார்சிலோனா கழிவு நீரின் மாதிரியில் கொரோனா வைரஸ் நாவலின் தடயங்களை ஸ்பானிஷ் வைராலஜிஸ்டுகள் கண்டறிந்துள்ளனர் என்று பார்சிலோனா பல்கலைக்கழகம் ஜூன் 26 அன்று தெரிவித்துள்ளது.
♦♦♦
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் புலம்பெயர் மக்களை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்காக ஜூலை 3 முதல் 15 ஆம் தேதி வரை 17 நாடுகளிடையே விமானங்கள் இயக்கப்படும் ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
♦♦♦
அந்தமான் நிகோபர் தீவில் திக்லிபூர் அருகே ஞாயிறன்று காலை 9 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 4.1 ஆக பதிவாகி உள்ளது.
♦♦♦
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கிய கொரோனா தொற்று பரவல், தற்போது உலக அளவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 1 கோடியை கடந்துள்ளது.1 கோடியே 80 ஆயிரத்து 158 பேராக அதிகரித்துள்ளது.
♦♦♦
பேஸ்புக்கில் போலி செய்திகள், மிரட்டல்கள், தவறான தகவல்கள் மற்றும் வெறுப்பு பேச்சுகள் ஆகியவை களையப்படும். மேலும் போலியான கணக்குகள் மூலம் சமுதாயத்துக்கு சீர்கேடு விளைவிக்கும் பதிவுகளை இடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்பட பெரிய அரசியல் தலைவர்களும் பேஸ்புக் வரம்புக்கு உட்பட்டுத்தான் பதிவுகளை இடவேண்டும் என்று பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.