tamilnadu

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

மோடிக்கு அறிவுரை இல்லையா?
புதுதில்லி:

“எப்போதும் மோடியை ஒரு பிசாசு போல் பாவித்து விமர்சித்துக் கொண்டே இருப்பது உதவாது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் சிங்வி, சசி தரூர் ஆகியோர் கூறியிருந்தனர். இது காங்கிரஸ் வட்டாரத்திற்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், “பிரதமர்மோடியும், எதிர்க்கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களை பிசாசு போல் பாவித்து விமர்சிப்பது உதவாது, என்று ஏன் எந்த ஒரு பாஜக பிரமுகரும் அறிவுறுத்தவில்லை?” காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் கேட்டுள்ளார்.

எய்ம்சில் ராம்தேவ் உதவியாளர்
புதுதில்லி:

‘பதஞ்சலி’ கார்ப்பரேட் நிறுவன முதலாளியாகவும், யோகா சாமியாருமாக வலம் வருபவர் ராம் தேவ். இவரது உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா. பதஞ்சலி நிறுவனத்தின் சிஇஒ-வாகவும்இருக்கிறார். இவர், உடல்நலக் குறைவு காரணமாக, உத்தர்கண்ட்டின் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நடுக்கம் மற்றும் நெஞ்சுவலி காரணமாக ஹரித்துவாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட பாலகிருஷ்ணா பின்னர் எய்ம்ஸிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆட்சி கவிழ குமாரசாமியே காரணம்
பெங்களூரு:

கர்நாடகத்தில், குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ, காங்கிரஸ்தலைவர் சித்தராமையாவே காரணம் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், ஆட்சி கவிழ்வதற்கு உண்மையில் எச்.டி. குமாரசாமியும், எச்.டி. ரேவண்ணாவும்தான் காரணம்; தேவகவுடா தங்கள் பக்கம் உள்ளதவறை மூடிமறைக்கவே என்மீது பழி போடுகிறார் என்று சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார்.

அமைப்புகளை கலைத்த அகிலேஷ்
லக்னோ:

மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து, உத்தரப்பிரதேச மாநில சமாஜ்வாதிக் கட்சியின் மாநில செயற்குழு, மாவட்டக் குழு, இளைஞரணி, மகளிர் அணி ஆகியஅனைத்து அமைப்புகளையும் கலைத்து, அக்கட்சியின் கட்சியின் தலைவர் அகிலேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார். கட்சியின் மாநிலத் தலைவராக நரேஷ்உத்தம் மட்டும் தொடர்ந்துநீடிப்பார் என்று அகிலேஷ் கூறியுள்ளார்.