tamilnadu

img

மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம்.. தாவூத் இப்ராஹிம் உள்பட 4 பேர் பயங்கரவாதிகளாக மத்திய அரசு அறிவிப்பு

புதுதில்லி:
மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம் உள்பட 4 பேரை  பயங்கரவாதிகளாக மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது.மும்பையில் கடந்த 2008 நவம்பர் 26 அன்று கடல் வழியாக நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 10 பேர் வெடிகுண்டுகளை வீசி, துப்பாக்கிச்சூடு நடத்திய தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த னர்.மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம் உள்பட ஹபீஸ்சயீத், ஷக்கி ரஹ்மான் லக்வி, மசூத் அசார்ஆகியோரை மத்திய அரசு பயங்கரவாதி களாக அறிவித்துள்ளது. தனிநபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்கும் ‘உபா’ சட்டத்தின் கீழ் மத்திய அரசு இந்த நடவடி க்கையை மேற்கொண்டுள்ளது.
மும்பை தொடர்குண்டு வெடிப்புக்குசதி திட்டம் தீட்டிய தாவூத் இப்ராகிம். இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி ஆவார். தற்போது பாகிஸ்தானில் தலைமறைவாக  உள்ளார். மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாகவும்   இந்தியாவில்நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களிலும்  தொடர்புடையவர்  ஹபீஸ் சயீத், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி ஷக்கி ரஹ்மான் லக்வி.  இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு முக்கிய காரணகர்த்தாவானவர்  ஜெய்ஷ்- இ- முகம்மது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார். இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு முக்கிய காரணகர்த்தாவான  மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது.

;