tamilnadu

img

5 மாதத்திலேயே நிதிப் பற்றாக்குறை ரூ.5.54 லட்சம் கோடி ஆனது

புதுதில்லி:
மத்திய அரசின் வருவாய் மற்றும் செலவினத்துக்கு இடையேயான வித்தியாசம்தான் நிதிப்பற்றாக் குறை எனக் கூறப்படுகிறது.அந்த வகையில், 2019-20 நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறைரூ. 7.02 லட்சம் கோடியாக இருக்கும்என்று பட்ஜெட்டில் கணிக்கப்பட்டு இருந்தது. உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 3.3 சதவிகிதத்தை, தாண்டிவிடாத வகையில்நிதிப்பற்றாக்குறையை வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே, 7.02 லட்சம் கோடி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், திங்கட்கிழமை வெளியான பொதுக்கணக்குத் தணிக்கைஇயக்குநர் வெளியிட்ட அறிக்கை மூலம், நிதியாண்டின் 5 மாதங்களுக்கு உள்ளாகவே, பட்ஜெட்டில்கணிக்கப்பட்ட நிதிப்பற்றாக்குறையில் 78.7 சதவிகிதம் எட்டப்பட்டு விட்டது, தெரியவந்துள்ளது.அதாவது, 12 மாதங்களுக்கான நிதிப்பற்றாக்குறை மதிப்பீடே ரூ. 7 லட்சத்து 2 ஆயிரம் கோடிதான் என்ற நிலையில், இதில் 5 மாதங்களுக்கு உள்ளாகவே ரூ. 5 லட்சத்து 53 ஆயிரத்து 840 கோடிசெலவிடப்பட்டு உள்ளது.

கடந்த 2018-19 நிதியாண்டிலும் இதேபோல 5 மாதங்களுக்குள் (ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 30க்குள்),கணிக்கப்பட்ட மொத்த செலவினத்தில் 86.5 சதவிகித செலவினங்கள் நடந்து முடிந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.எனினும், அரசு தொடர்ந்து தனது கணிப்பில் உறுதியாக உள்ளது எனவும், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பாதியில்நிதிப் பற்றாக்குறை ரூ. 2 லட்சத்து68 ஆயிரம் கோடிக்குள் கட்டுப்படுத்தப்படும் எனவும் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அதானு சக்ரபோர்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

;