tamilnadu

img

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கடற்படை தளபதி காலமானார்

புதுதில்லி:
இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல்சுஷில் குமார் உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 79.இந்திய கடற்படையின் தளபதியாக 1999 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம்ஆண்டு வரை பணியாற்றியவர் சுஷில் குமார். இவர் 1940ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்தார். 1956 ஆம் ஆண்டுபுனேயில் தேசிய பாதுகாப்பு அகாடமியில், கடற்படை வீரராகப் பயிற்சியில் சேர்ந்து நிறைவு செய்தார்.கோவாவை விடுவிப்பதற்காக 1961ஆம் ஆண்டு நடைபெற்ற கடற்படை தாக்குதலில் பெரும்பங்கு வகித்தார். 1971ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் போரின்போது, கராச்சி துறைமுகத்தை இந்தியா செயலிழக்கச் செய்தது. இதிலும் தலைமை பொறுப்பெடுத்து முக்கிய பங்காற்றினார்.
கார்கில் போரின் போது இந்திய கடற்படைக்கு தலைமை தாங்கிய சுஷில் குமார், ஹைட்ரோகிராபி மற்றும் நீர் மற்றும் நில போர் முறைகளில் நிபுணராக திகழ்ந்தார். 1999 ஆம் ஆண்டு கார்கில் போரில் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் சுஷில் குமார், உடல்நலக்குறைவு காரணமாக தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புதன்கிழமையன்று   அதிகாலையில் காலமானார்.