tamilnadu

img

சபரிமலை தீர்ப்புக்கு எதிரான போராட்டங்கள்... நீதிபதிகள் சந்திரசூட், நாரிமன் கண்டனம்

புதுதில்லி:
சபரிமலை வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்வுக்கு விடுவது பெரும்பான்மை தீர்ப்பு. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் இந்த தீர்ப்பை அளித்துள்ளனர்.ஆனால் முன்பு பிறப்பித்த தீர்ப்பில் உறுதியாக இருந்த நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமனும், டி.ஒய்.சந்திரசூட்டும் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தனர். பெண்கள் சபரிமலை செல்வதை அனுமதித்து அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக நடந்த வன்முறைகளையும் நாரிமன் சுட்டிக்காட்டினார். முஸ்லிம், பார்சி பெண்கள் வழிபாட்டுத் தலங்களில் நுழைவது தொடர்பான வழக்கை விரிவான அமர்விடம் ஒப்படைத்து இரண்டு பிரச்சனைகளையும் கலக்க வேண்டாம் எனவும் நாரிமன் கூறினார். இயற்கைக் காரணங்களுக்காக பெண்களை மசூதியில் இருந்து தடை செய்யக்கூடாது என்பதே அசல் தீர்ப்பாக இருந்தது. ஆனால் உச்சநீதிமன்ற தீப்புக்கு எதிராக பரவலான தாக்குதலும், அத்து மீறல்களும் நடந்தன. அதற்கு கடும் எதிர்ப்பையும் நாரிமன் தெரிவித்தார்.

தீர்ப்புக்கு எதிராக நடந்த வன்முறை போராட்டங்களை நாரிமன் விமர்சித்தார். நீதிமன்ற தீர்ப்புடன் சட்டப்படி முரண்படும் உரிமை அனைவருக்கும் உள்ளது; ஆனால் அமைப்பு ரீதியாக தீர்ப்பை அனுமதிக்க முடியாது என்று கூறுவதை அனுமதிக்க முடியாது. அரசியல் சாசனமே வேதாகமம். உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு கூறினால் அது இறுதியானது என்றும் நாரிமன் கூறினார். சபரிமலைக்கு பெண்கள் செல்வதை அனுமதித்த தீர்ப்புக்கு எதிராக அமைப்பு ரீதியாக வன்முறைகளும் போராட்டமும் நடந்ததை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டும் கண்டித்தார். ஒரு தீர்ப்பு வந்தால் அது அனைவருக்கும் பொருந்தும் எனவும் அவர் கூறினார்.  மதத்திற்கு பெரும் முக்கியத்துவம் உள்ளது என நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறினார். மத நம்பிக்கையும் பிரதிஷ்டை செய்யும் உரிமையும் முக்கியமான விவாதங்கள் என்று அவரது தீர்ப்பில் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் தார்மீகமும் நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டதாக தலைமை நீதிபதி கூறினார். சபரிமலை தீர்ப்பும் முஸ்லிம்
பெண்களின் வழிபாட்டிடம் நுழையும் உரிமையும் தொடர்புடையவை என தலைமை நீதிபதி கூறினார்.

;