புதுதில்லி, ஆக. 26- நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கூட்டத் தொடர் மொத்தம் 18 நாட்கள் நடைபெறுகின்றன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிநபர் இடைவெளியை உத்தர வாதம் செய்யும்பொருட்டு, மாநிலங்களவை முற்பகலில் என்றால், மக்களவை பிற்பக லிலும் அல்லது மாநிலங் களவை பிற்பகலில் என்றால் மக்களவை முற்பகலிலும் நடைபெறும் வகையில் நிகழ்ச்சிநிரல் திட்டமிடப் பட்டிருக்கிறது. இப்போது ள்ள இரு அவைகளின் இருக் கைகளிலும் இரு அவை களின் உறுப்பினர்களும் அம ரும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக் கின்றன.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஆறு மாதங்களுக் குள் கூட்டப்பட்டாக வேண்டும் மார்ச் 23 பட்ஜெட் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்ட தால், மழைக்காலக் கூட்டத் தொடர் செப்டம்பர் 23க்குள் கூட்டப்பட வேண்டும். அதன் காரணமாகவே அதற்கு முன்னதாக செப்டம்பர் 14 அன்று கூட்டப்பட்டிருக்கிறது. மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகைகளை மத்திய அரசு அளித்திட வில்லை. பிஎம்கேர்ஸ் என் னும் தனியார் அறக்கட்டளை சார்பில் வசூலிக்கப்பட்ட தொகையையும் மாநிலங் களுக்கு பகிர்ந்தளித்திட வில்லை. மேலும் பொதுத் துறை நிறுவனங்களைத் தன் கூட்டுக்களவாணி முதலாளி களுக்குத் தாரை வார்க்கப் படுகின்றன இவற்றையெல் லாம் மழைக்காலக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சியினர் எழுப்புவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. (ந.நி.)