tamilnadu

img

பாரத் பெட்ரோலியம் நிறுவனப் பங்குகளை விற்பது நல்லதல்ல!

புதுதில்லி:
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தை தனியார் மயமாக்குவது, நல்லதல்ல என்று, சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான ‘மூடிஸ்’ எச்சரிக்கை செய்துள்ளது.அரசாங்கம் தனக்குச் சொந்தமான பங்குகளை தனியாருக்கு விற்பது, சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் தரத்தைக் குறைக்கும் என்று மூடிஸ்கூறியுள்ளது.நாட்டின் 2-ஆவது பெரிய எண்ணெய்சுத்திகரிப்பு நிறுவனமாக, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் (பிபிசிஎல்)உள்ளது.  நாட்டில் நுகரப்படும் மொத்தபெட்ரோலிய பொருட்களில், பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 21 சதவிகித பங்கைக் கொண்டிருக்கிறது. லாபத்திலும் இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்த மாபெரும் நிறுவனத்தை தனியார் மயமாக்க மோடி அரசு முடிவு செய் துள்ளது. 

அதாவது, இந்த நிறுவனத்தில் மத்தியஅரசுக்கு இருக்கும் 53.29 சதவிகிதப் பங்குகளைத் தனியாருக்கு விற்க, கடந்த செப்டம்பர் 30 அன்று அதன் முதலீட்டாளர்கள் குழு மூலம் ஒப்புதல் பெற்று, 2020 மார்ச் 31-ஆம் தேதிக்குள் பங்குகளை விற்று முடிக்க இலக்கு நிர்ணயித் துள்ளது.இந்நிலையில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்குவிற்பதன் மூலம், அந்த நிறுவனம் தனதுமதிப்பீட்டை இழக்கும் என்று தரக் குறியீட்டு நிறுவனமான ‘மூடிஸ்’ எச்சரிக்கை டுத்துள்ளது.“தற்போதைய நிலையில், பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட், ‘பிபிபி’(BBB) என்ற தரக் குறியீட்டைப் பெற் றுள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் தனது முழு பங்குகளையும் ஒரு அரசு சாராத நிறுவனத்திற்கு விற்றால், நாங்கள் இனி பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் (பிபிசிஎல்) நிறுவனத்தின் மதிப்பீட்டில் அரசாங்கத்தின் ஆதரவை சேர்க்க மாட்டோம்; இதன் விளைவாக நாங்கள் எந்த மாற்றங்களும் இல்லைஎன கருதி ‘Ba1’ என்று தரக்குறியீட்டை குறைப்போம்” என்று ‘மூடிஸ்’கூறியுள்ளது.அதுமட்டுமன்றி, ‘ஒரு அரசானது இவ்வாறு பங்குகளை விற்று, கடன் பத்திரத்தை மீட்க முயற்சிப்பதும், நாட்டை எதிர் மறைக் கடனிலேயே கொண்டுவிடும்” என்றும் அறிவுறுத்தியுள்ளது.

;