புதுதில்லி:
நாட்டின் தேசிய விமானச் சேவையான ‘ஏர் இந்தியா’ நிறுவனம் தனியார்மயம் ஆக்கப்படாவிட்டால் விரைவில் மூடப்படும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்துஅமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள் ளார். மாநிலங்களவையில் இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ஏர் இந்தியாவை நாங்கள் தனியார்மயம்ஆக்கவில்லை என்றால், அதை இயக்க எங்கிருந்து பணம் கிடைக்கும்? ‘ஏர் இந்தியா’ ஒருமுதல் தரச் சொத்து. நாங்கள் அதை இப்போது விற்றால் ஏலதாரர்களைப் பெறுவோம்.மாறாக, நாட்டின் தேசிய விமான சேவையான ‘ஏர் இந்தியா’ தனியார் மயமாக்கப்படாவிட்டால், அதனை விரைவிலேயே மூடவேண்டியதாகி விடும். ‘ஏர் இந்தியா’வைநாங்கள் விற்பதே அதன் நலனுக்காகத்தான். அந்த வகையில், அனைத்து ‘ஏர் இந்தியா’ ஊழியர்களுக்கும் சாதகமான ஒப்பந்தம் உறுதி செய்யப்படும்.இவ்வாறு ஹர்தீப் சிங் பூரி தெரிவித் துள்ளார்.