tamilnadu

img

விஷவாயு கசிவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம்.... ஆந்திர முதல்வர் அறிவிப்பு 

விசாகப்பட்டினம்
ஆந்திர மாநிலத்தின் முக்கிய நகரான விசாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள கோபால்பட்டிணம் எல்.ஜி.பாலிமர்ஸ் என்ற பெயரில் ரசாயன ஆலையில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் வெளியான ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிவினால் 5 கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1000-க்கும் மேற்பட்டோர் சுவாசக்கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தால் ஆந்திர மாநிலம் கடும் அதிர்ச்சியில் உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விசாகப்பட்டினத்துக்குச் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி விஷவாயுக்கசிவினால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும்  எனவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனவும், விஷவாயுக்கசிவு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

;