tamilnadu

img

ஆமாம் சாமி போட்டால்தான் மோடிக்குப் பிடிக்கும்.. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி விமர்சனம்

புதுதில்லி:
நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் அலுவலகத்தில் இருப்பவர்கள் மூலமே வழிநடத்தி விட முடியாது என்றுரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அண்மையில் விமர் சித்திருந்தார்.“பிரதமரைச் சுற்றியுள்ளவர்கள் மட்டுமே திட்டமிடுதல், முடிவெடுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருவது, அரசியல் கட்சிகளை நிர்வகிப்பதற்கு உகந்ததாக இருக்கலாமே தவிர, அதன்மூலம் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது” என்று அவர் கூறியிருந்தார்.

பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியசாமியும் இதே கருத்தை தெரிவித்தார். “இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், பிரதமர் நரேந்திர மோடியை சுற்றி இருக்கும் ஆமாம் சாமி கூட்டங்கள்தான்” எனதெரிவித்த சுப்பிரமணியசாமி, “பிரதமரை சுற்றியுள்ளவர்கள், அவரிடம் பொய்யான வளர்ச்சியை கூறி நம்பவைக்கிறார்கள்” எனவும் கடுமையாகச் சாடியிருந்தார்.இந்நிலையில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ்வரும், “ஆமாம் சாமி பேர்வழிகளையேபிரதமர் மோடிக்குப் பிடிக்கும்” என்றுவிமர்சித்துள்ளார். ‘பிரசார் பாரதி’ அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக, 2012 முதல் 2016வரை பணியாற்றியவர்தான் ஜவஹர்சர்க்கார். இவர், பிரதமர் மோடியைச் சுற்றியுள்ள பொருளாதார ஆர்வலர் கள் மற்றும் அமைச்சர்கள், அவருக்கு அரசியலைப் பற்றி மட்டுமே அறிவுரை வழங்குகின்றனர் என்று ரகுராம் ராஜன் கூறியது உண்மைதான் என்றுதெரிவித்துள்ளார்; “நானும் 2 ஆண்டுகள் மோடி அரசில் பணிபுரிந்துள்ளேன். பிரதமருக்கு ‘ஆமாம் சார், நீங்கள்கிரேட் சார்’ என்று சொல்வது மட்டுமேபிடிக்கும்; இதனால் இந்தியாதான் தற்போது துயரத்தைச் சந்திக்கிறது” என்றடுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

;