tamilnadu

img

மூன்று மாதங்களுக்குப் பிறகும் ஓய்வற்ற பணி

மட்டன்னூர்:
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா இதுவரை இத்தனைநாட்கள் வீட்டுக்கும் சொந்த ஊருக்கும் செல்லாமல் இருந்ததில்லை. இதோ மூன்று மாத இடைவெளியில் ஒரே ஒரு நாள் வீட்டில் தலைகாட்டிவிட்டு மீண்டும் கோவிட்டுக்கு எதிரான போர்க்களம் திரும்பியிருக்கிறார்.

கோவிட் தடுப்பு நடவடிக்கைகளின் தொடர் ஓட்டத்தினிடையே வீட்டுக்குஒரு மின்னல் பயணம் மேற்கொண்டார் அமைச்சர் கே.கே.சைலஜா. இதுவரை இரண்டு வாரங்களுக்கு மேல் வீட்டிலிருந்து விலகி இருந்ததில்லை அவர். இப்போது முதல்முறையாக மூன்று மாத இடைவெளி. திருவனந்த புரத்திலிருந்து சனியன்று காலை பழஸ்ஸியில் உள்ள தனது ஆரதி இல்லத்திற்கு திரும்பினார். ஒருநாள் குடும்பதுடன் தங்கிய அவர் ஞாயிறன்று மீண்டும் புறப்பட்டார்.

“வீராஜ்பேட்டயில் பிஎஸ்சி படிக்கும்போதும், பின்னர் வெளிநாடு சென்ற போதும் அதிக நாட்கள் வீட்டைப் பிரிந்துஇருந்துள்ளேன். இத்தனை அதிக மான நாட்கள் வீட்டையும் ஊரையும் விட்டு பிரிந்திருந்தது இதுதான் முதல் முறை” என்றார் அமைச்சர். வீட்டிற்கு சென்றபிறகு பதற்றம் குறைந்ததா என்கிற கேள்விக்கு, எங்கே இருந்தாலும் பதற்றம் அகலவில்லை என பதிலளித்தார்.  இதற்கு முன்பு பிப்ரவரி 18 ஆம் தேதி வீட்டிற்கு சென்றுள்ளார். கேரளத்தின் முதலாவது கோவிட் நோயாளி கண்டறியப்பட்டது முதல் திருவனந்தபுரத்தை மையமாக்கிக் கொண்டார். எச்சரிக்கையுடன் கோவிட்டின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங் களை கடந்து மூன்றாம் கட்டத்தில் நோய் பரவலின் தீவிரம் சற்று தணிந்ததும் வீட்டுக்கு சென்றார். மூன்று மாதங்களுக்குப் பிறகு பாட்டியை பார்த்த மகிழ்ச்சியில் பேத்தி இபயா ஜஹ னாரா அவரிடமிருந்து விலகவில்லை. கணவர் பாஸ்கரன், மகன் லஸித், மருமகள் மேஹா ஆகியோர் வீட்டில் இருந்தனர்.

வீட்டில் இருந்தாலும் ஓய்வெடுக்க நேரமில்லை. காணொலி மூலம்சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளின் கூட்டம். தொடர்ந்து துறை ரீதியானகூட்டம். பல்வேறு மருத்துவமனை களில் இருந்தும் தொலைபேசியில் விவரங்களை அறிவது. இதற்கிடையே தொகுதி மக்கள் பிரச்சனைகளில் தலையீடு என தொடர்ச்சியான பணி. ஞாயிறன்று காணொலி மூலம் குலாத்தி நிறுவனத்தின் கருத்தரங்கிலும் பங்கேற் றார். தொடர்ந்து கோவிட் ஆய்வுக் கூட்டமும், தகவல் சேகரிப்பும், அவற்றை முதல்வரிடம் தெரிவிப்பதுமாக இருந்தார். மாலையில் காரில் திருவனந்த புரம் புறப்பட்டார்.

;