tamilnadu

img

மங்கலாகிவிட்டதால் கழற்றிவிட்டார்களாம்... காந்தி கொல்லப்பட்ட போது எடுத்த புகைப்படங்கள் அகற்றம்!

மோடி அரசுக்கு துஷார் காந்தி கண்டனம்

புதுதில்லி, ஜன. 17 - மகாத்மா காந்தி சுடப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் புதுதில்லியிலுள்ள மகாத்மா காந்தி நினைவு அருங்காட்சியகமான ‘காந்தி ஸ்மிருதி’யிலிருந்து (பிர்லா மாளிகை) திடீரென அகற்றப்பட்டது, சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. பிரதமர் மோடியின் உத்தரவு பேரி லேயே, இது நடந்துள்ளதாக மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக துஷார் காந்தி அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  “அதிர்ச்சியடைந்தேன்! ஹென்றி கார்ட்டி யர் பிரெஸானின், மகாத்மா காந்தி கொலை யுண்ட பிறகான புகைப்படங்கள் காந்தி ஸ்மிருதி யிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. பிரதான் சேவக்கின் உத்தரவின் பேரில் இந்த முக்கியப் புகைப் படங்கள் அகற்றப்பட்டுள்ளன. காந்தியைக் கொன்ற வர்கள் வரலாற்று ஆதாரத்தை அழிக் கின்றனர். ஹே ராம்!” - என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி தன்னை ‘பிர  தான் சேவக்’ என்று அழைத்துக் கொள்வார். அதனைக் குறிப்பிட்டே, துஷார் காந்தி பிரதமர் மோடியை  குற்றம் சாட்டியுள்ளார். காந்தி ஸ்மிருதியின் தலைவராக பிரதமர்தான் இருக்கிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், துஷார் காந்தி தவறான தகவலை அளிப்பதாகவும், காந்தியின் அந்தப் புகைப்படங்கள் மங்கலாகி விட்டதால், அவற்றை டிஜிட்டலாக்கி திரையில் தெரியுமாறு செய்துள்ளோம் என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் சமாளித்துள்ளார்.

;