tamilnadu

img

மத ரீதியான பிரிவினையை காந்தி ஏற்றுக் கொண்டதில்லை... குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி பேச்சு

புதுதில்லி:
மத்திய முன்னாள் அமைச்சர் எம்.ஜே. அக்பர், “காந்தியின் இந்துக் கோட்பாடு;ஜின்னாவின் இஸ்லாம் போராட்டம்” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதனை தில்லியில் வெளியிட்டு பிரணாப் முகர்ஜி அண்மையில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:மகாத்மா காந்தி தனது பொதுவாழ்க்கையின் ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்தியாவின் ஒற்றுமைக்காக போராடினார். மதரீதியில் இந்தியா பிரிவதை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. தனது முழு வாழ்க்கையையும் இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காக அர்ப்பணித்தவர்.அவர் நமது நாட்டின் தேச தந்தைமட்டுமல்ல. இந்த நாட்டையே உருவாக்கியவர். நாம் எந்த பாதையில் செல்ல வேண்டும், எந்த அளவுகோலைமேற்கொள்ள வேண்டும் என்பதற்கெல்லாம் வழிகாட்டியவர்.

இந்து மதத்தில் இருந்த உள்ளார்ந்த சக்தி, ஒருங்கிணைத்தல், மதிப்பீடு, அதன்தழுவல் ஆகியவற்றின் மீது மகாத்மாகாந்தி மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதே நேரத்தில் இந்தியாவில்அனைத்து மதத்தினரும் தங்கள்நம்பிக்கையை கடைபிடிக்க இடம் இருக்கிறது என்பதை அவர் உறுதியாக நம்பினார்.ஒவ்வொரு மத நம்பிக்கைக்கும் இந்தியா எப்போதுமே தாயகமாக இருந்துள்ளது. ஆகவே எந்த மத நம்பிக் கைக்கும் இந்தியாவில் ஆபத்து இருக்க முடியாது என்று மகாத்மா காந்திஅறிவித்தார். அனைத்து நேரங்களிலும் இந்தியாவின் ஒற்றுமைக்காக போராடினார்.மதரீதியாக நாட்டை பிரிப்பதன் மூலம்தான் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்என்பதை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள். அதுவே இந்தியா, பாகிஸ்தான்பிரிவினைக்கும்- அதனால் நீடித்த பகைக்கும் காரணமாகி விட்டது.இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசியுள்ளார்.

;