tamilnadu

img

ஆமாம்.. ரயில் கட்டணங்களை மாநிலங்கள்தான் ஏற்கின்றன..!

புதுதில்லி:
தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமல் மோடி அரசு அறிவித்த பொதுமுடக்கத்தால் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத தொழிலாளர்கள், பசியிலும் பட்டினியிலும் சித்ரவதையை அனுபவித்தனர். லட்சக்கணக்கானோர் நடந்தே சொந்த ஊருக்குச் செல்ல ஆரம்பித்தனர்.

இதனிடையே நான்காம் கட்ட பொதுமுடக்க அறிவிப்புகளில் சில தளர்வுகளை அறிவித்த மோடி அரசு,மே 1-ஆம் தேதிக்குப் பிறகு, புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ‘ஷ்ராமிக்’ என்னும் சிறப்பு ரயில் சேவைகளை இயக்கி வருகிறது.முன்னதாக, இந்த ரயில்களுக் கான கட்டணத்தில் 85 சதவிகிதத்தைமத்திய அரசும், 15 சதவிகிதத்தைமாநில அரசுகளும் ஏற்றுக் கொள் ளும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு சொன்னபடி நடந்து கொள்ளவில்லை. இப்போது
வரை, தொழிலாளர்கள் தங்களின் சொந்தப் பணத்தை- அதுவும் வழக்கத்தைவிட கூடுதலான கட்டணத்தை செலுத்தியே பயணித்து வருகின்றனர்.பாஜகவினரோ, மத்திய அரசுதான் கட்டணத்தைச் செலுத்தி வருகிறது என்று கூசாமல் பொய் கூறி வந்தனர்.இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர் தொடர்பான வழக்கில்,மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல்துஷார் மேத்தா, உச்ச நீதிமன்றத்தில்ஆஜராகி விளக்கம் ஒன்றை அளித் துள்ளார்.அதில், மத்திய அரசுதான் கட்டணத்தை ஏற்கிறது என்று கூறாதஅவர், “ஷ்ராமிக் சிறப்பு ரயில் களுக்கான கட்டணத்தை தொழிலாளர்களை அனுப்பும் அல்லது தொழிலாளர்கள் சென்றுசேரும் மாநிலங்களே அளிக்கின்றன” என்றுகூறியுள்ளார். இதனால் பாஜகவினர்இவ்வளவு காலமும் கூறிவந்த பொய்அம்பலமாகி இருக்கிறது.