tamilnadu

img

ரிலையன்ஸ் மதிப்பு ரூ.14 லட்சம் கோடி... உலகின் 5-ஆவது பெரிய பணக்காரர் ஆன அம்பானி!

புதுதில்லி:
கடந்த சில வாரங்களாகவே, முகேஷ் அம்பானின் ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவன பங்குகளின் விலை தொடர் உயர்வில் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில்,  ரிலையன்ஸ் நிறுவன பங்கு ஒன்றின் விலை புதிய உச்சமாக 2,060 ரூபாயைத் 
தொட்டு , ஒட்டுமொத்தமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ. 13 லட்சத்து 90 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் 49 சதவிகித பங்குகளை, முகேஷ் அம்பானிதான் வைத்திருக்கிறார் என்பதால், பங்குகள் விலை அதிகரிக்கும் போது, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் அதிகரிப்பது வழக்கம்.இதன்படி, கடந்த வியாழனன்று ஒரேநாளில் 2.9 பில்லியன் டாலர் (சுமார் 21,500 கோடி ரூபாய்) அம்பானியின் சொத்து மதிப்பு அதிகரித்து இருக்கிறது.இதன்மூலம், அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, 74.7 பில்லியன் டாலரைத் தொட்டு, உலகின் 5-வது பெரிய பணக்காரராக அவரை மாற்றியிருக்கிறது.சொத்துமதிப்பில், அண்மையில் உலகின் முன்னணி முதலீட்டாளரான வாரன் பபெட், கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனர் லாரி பேஜ் ஆகியோரை பின்னுக்குத் தள்ளிய அம்பானி, முகநூல் நிறுவனத்தின் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு (89 பில்லியன் டாலர் சொத்து) அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார்.

;