tamilnadu

img

மக்கள் பணத்தை தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்கும் ரயில்வே - ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்

பொதுமக்களின் பணத்தை தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரயில்வே நிர்வாகம் வாரி வழங்குவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலில் தெரியவந்துள்ளது. 
ரயில்வே அமைச்சகத்தின் முழு உரிமையாளரான ஐ.ஆர்.சி.டி.சி நேசனல் டிரான்ஸ்போர்ட் டிராவல் இன்சூரன்ஸ் ஸ்கீம் மூலம் ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், ஐசிஐசிஐ லோம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆகிய தனியார் நிறுவனங்களிடம் வரையறுக்கப்பட்ட டெண்டர் மூலம் ஒப்பந்தம் செய்துள்ளது. 
கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பரில் இன்சூரன்ஸ்க்காக ஒரு பயணிக்கு 0.92 ரூபாயாக தொடங்கப்பட்டது. இது இந்திய ரயில்வே கேட்டரிங் சுற்றுலா கார்ப்பரேஷன் அதிகாரப்பூர்வ வலைதளம் வழியாக மின் டிக்கெட் முன்பதிவு செய்து உறுதி செய்யப்பட்ட பயணிகளுக்கு இந்த வசதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கிளைம் செய்யப்பட்ட தொகை குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் தகவல் கேட்டிருந்தார்.  இதில் ஐ.ஆர்.சி.டி.சி  காப்பீட்டு நிறுவனங்களுக்கு 38.89 கோடி ரூபாய் பிரிமியம் செலுத்தியுள்ளது.  ஆனால் இதுவரை ரூ 7.29 கோடி ரூபாய் மட்டுமே க்ளைம் செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 
 

;