புதுதில்லி, ஆக. 21- கொரோனா காலத்தில் பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களை நடத்து வதற்கான வழிகாட்டு நெறி முறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளி யிட்டுள்ளது. தேர்தல் தொடர்பான வேலைகளில் ஈடுபடும் அனைவருக்கும் முகக்கவ சம் கட்டாயம். தெர்மல் ஸ்கேனர் சோதனை நடத் தப்படும். கைகளை கழுவ சானிடைசர், சோப்பு வைக்கப்படும். தனிமனித இடை வெளியை பின்பற்ற நடவ டிக்கை எடுக்கப்படும். கொரோனா கால முன் னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, மாநில, மாவட்ட மற்றும் சட்டமன்ற தொகுதி ரீதியாக கண் காணிக்க அதிகாரி நிய மிக்கப்படுவர் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.