tamilnadu

img

ஆங்கிலோ-இந்திய மக்களுக்கான  இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தல்

ஆங்கிலோ - இந்திய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தி கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்  10.12.2019 அன்று மக்களவையில் பேசினார் அப்போது அவர் கூறியதாவது
எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கான வேலை வாய்ப்புகளுக்கான இட ஒதுக்கீட்டை,  10 ஆண்டுகளுக்கு அதாவது 2030 ஆண்டு வரை நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும், நீட்டிக்கும்  இந்த மசோதாவின் முதல் பகுதியை நான்  ஆதரிக்கிறேன். ஆனால் இந்த மசோதாவில், ஆங்கிலோ இந்திய சமூகத்திற்கான இடஒதுக்கீடு அல்லது பிரதிநிதித்துவத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை நான் எதிர்க்கிறேன். 
ஆங்கிலோ-இந்தியர்களுக்கு என்று சொந்த மாநிலம் இல்லை என்பதால், அவர்கள் குறைவான எண்ணிக்கையிலானவர்களாக இருப்பதால், அல்லது புவியியல் ரீதியாக சிறுபான்மையினராக இருப்பதால், நாடாளுமன்றத்தில் அல்லது மாநில சட்டமன்றங்களில் தங்களது சமூக நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தேவைப்படுகிறது.
இதற்கு எதிரான இந்த மசோதாவின் பகுதிகள், அறியப்படாத காரணங்களுக்காக, அமைதி நேசிக்கும், மத சமூகத்திற்கு எதிரான, ஒரு வகையான மோசமான வஞ்சகமான நடவடிக்கைகயாகும். இந்த நடவடிக்கைக்கான மோடி அரசாங்கத்தின் கூற்று என்னவென்றால் இந்த சமூகம் இப்போது நலமாக உள்ளது, எனவே அரசியலமைப்பு  சட்டத்திலுள்ள, சிறப்பு உரிமைகள் எதுவும் தொடர வேண்டியதில்லை என்பதே. இந்த அனுமானம், குறிக்கோள்களுக்கும் யதார்த்தத்திற்கும் முற்றிலும் முரணானது.
இச்சமூகத்தில், இன்னும் கூட, சில குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றன என்பது நமக்கெல்லாம் தெரியும். சமீபத்திய வெள்ளம் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பல ஆங்கிலோஇந்திய மக்களின் கனவுகளையும் நாசப்படுத்தியது.  ஆங்கிலோ இந்திய சமூகத்திற்கு, மேலும் 10 ஆண்டுகளுக்கு ஒதுக்கீட்டை நீட்டிக்குமாறு அரசாங்கத்திடமும் அமைச்சரிடமும் நான் எனது வேண்டுகோளை வலியுறுத்தி பதிவு செய்து கேட்டுக்கொள்கிறேன்.  ஆங்கிலோ-இந்திய மக்கள் குறித்து இந்த மசோதாவில் ஒரு வார்த்தை கூட தாங்கள் குறிப்பிடவில்லை என்று அமைச்சர் மிகவும் புத்திசாலித்தனமாக கூறுகிறார்.

இதுவே ஆங்கிலோ இந்திய சமூக மக்களுக்கு  வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு தானாகவே கழிந்து விடும் என்பதைக் காட்டுகிறது. 
எனவே, சபாநாயகர், உங்கள் மூலம், என் கோரிக்கையை பரிசீலிக்குமாறு அமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். ஆங்கிலோ-இந்திய மக்களுக்கு இடஒதுக்கீட்டை இன்னும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அமைச்சர் ஒரு விதிமுறையை இந்த மசோதாவிலேயே சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.