tamilnadu

img

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை

இந்திய மருந்து தரக்கட்டுபாடு அமைப்பு அனுமதி

புதுதில்லி, ஏப்.19- கொரோனா நோயாளிகளுக்கு சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இதனால், கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்த இனி பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கு ஒரு சிகிச்சை முறையைப் பின்பற்ற வேண்டுமெனில், அதற்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். இந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித் துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சைக்கான சோதனை நடத்த சில மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறு வனங்கள் தயாராக இருப்பதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அண்மையில் ஒரு பட்டியலை சமா்ப்பித்தது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நெறிமுறை களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. அதன் அறிக்கையை, நிபுணா்கள் குழு கடந்த 13-ஆம் தேதி கூடி விவாதித்து, பிளாஸ்மா சிகிச்சையைத் தொடங்க லாம் என்று பரிந்துரை செய்தது. அதனடிப்படையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விடுத்த கோரிக்கைக்கு ஒப்பு தல் அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

குணமடைந்த கொரோனா நோயாளியின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா திரவத்தை எடுத்து, கொரோனா நோயாளி யின் உடலில் செலுத்தும்போது, அவரது நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்து விடும். இதையடுத்து, அந்த நோயாளி தொற்றில் இருந்து விரைவில் குணமடைவார். ஏ.ஆர்.டி.எஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஐந்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயாளிகளுக்கு நடு நிலைப்படுத்தும் ஆன்டிபாயடிகளைக் கொண்ட பிளாஸ்மா வுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஐந்து நோயாளிகளுக்கும் பிளாஸ்மா செலுத்தப்பட்டதில் அவர்கள் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இரண்டுபேர் வெண்டிலேட்டர் கண்காணிப்பில் உள்ளனர்.

பிளாஸ்மா செலுத்தப்படுவதால் பாதகமான விளைவுகள் ஏற்படாது. குறிப்பாக மரணம் நிகழாது. இதன் மூலம் கொரோனா தொற்று நோயாளிகளுக்கான சிகிச்சை மேம்படும், இவ்வாறு அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. 1918- ஆம் ஆண்டு ஸ்பானிஷ் ப்ளூ காய்ச்சலின் போது எச்1 என்1 இன்ஃப்ளூயன்ஸா கொண்ட 1,703 நோயாளி களுக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்கப்பட்டது. இதன் மூலம் இறப்புவிகிதம் குறைந்துள்ளது. எபோலா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 84 நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை யளிக்கப்பட்டது.

;