4 ஆயிரம் பேர் கைது; பெயர்ப் பட்டியல் வெளியானது
புதுதில்லி, ஆக.19- ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இது வரை சுமார் 4 ஆயிரம் பேர் வரை கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று ஏ.எப்.பி. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கைதானவர்களைக் காவலில் வைக்க காஷ்மீர் மாநிலச்சிறைகளில் இட மில்லை என்பதால் அவர்கள் பக்கத்து மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டு உள்ளனர் என்றும் கூறியுள்ள ஏ.எப்.பி. நிறுவனம், பெயர் வெளியிட விரும்பாத மாவட்ட நீதிபதி அளித்த தகவலின் பேரில், இந்த செய்தியை வெளியிட்டுள் ளதாகவும் கூறியுள்ளது. “பொது பாதுகாப்புச் சட்டம் (Public Saftey Act) என்ற சர்ச்சைக்குரிய சட்டப் பிரிவில் ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சட்டப்பிரிவின்படி கைது செய்யப்பட்ட வர்களை இரண்டு வருடங்கள் வரை விசா ரணையோ, குற்றப்பத்திரிகை பதிவு இல்லாமலோ சிறையில் வைக்கலாம். அதன்படி இன்னும் பலர் காவல் நிலை யங்களில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். ராணுவ அதிகாரிகள், நீதிபதிகள் மற் றும் அரசு அலுவலர்கள் ஆகியோருக்குச் செயற்கைக்கோள் தொலைபேசி வழங் கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக் குள் தகவல் பகிர முடியும்” என்று ஏ.எப்.பி. செய்தியில் மாவட்ட நீதிபதி தெரி வித்துள்ளார். ஜம்மு - காஷ்மீர் அரசு செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சல், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை யைக் கூற மறுத்திருந்தார். ஆனால், ஏ.எப்.பி. நிறுவனம் ஏராளமான அரசு அதி காரிகளிடமும் அரசு ஊழியர்களிடமும் போலீசாரிடமும் பேசி, ஆயிரக்கணக்கா னவர்கள் கைது செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளது.
கைதான காஷ்மீர் தலைவர்களின் பட்டியல்
இதனிடையே, ஜம்மு - காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள முதன்மையான தலைவர்கள் குறித்த விபரங்கள் ஊட கங்களில் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 5-ஆம் தேதியில் இருந்து ஜம்மு- காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால், அதற்கு முதல்நாள் இரவே, முன்னாள் முதல்வர் கள் பரூக் அப்துல்லா, உமர் அப் துல்லா, மெகபூபா முப்தி மற்றும் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், முன்னாள் முதல் வர்கள் மட்டுமன்றி முன்னாள் அமைச் சர்கள் 7 பேர், மேயர், துணை மேயர்கள், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள், பிர பலமான வழக்கறிஞர்கள், பேராசிரி யர்கள், தொழிலதிபர்கள், பார் கவுன்சில் உறுப்பினர்களும் ஆயிரக்க ணக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. கைது பட்டியலில் இடம்பெற்றுள்ளோர் விபரம் வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முகம்மது யூசுப் தாரி காமி (நான்கு முறை சட்டமன்ற உறுப்பி னராக தேர்வு செய்யப்பட்டவர்). அலி முகமது சாகர் (தேசிய மாநாட்டுக் கட்சி பொதுச்செயலாளர், மத்திய முன்னாள் இணையமைச்சர், 4 முறை எம்எல்ஏ-வாக இருந்தவர்). கலிதா ஷா (பரூக் அப்துல்லாவின் சகோதரி மற்றும் முன்னாள் ஜம்மு - காஷ்மீர் மாநில முதல்வர் குலாம் முக மது ஷாவின் மனைவி. அவாமி தேசிய மாநாட்டு கட்சியின் முக்கியத் தலை வர்).
அப்துல் ரஹீம் ரத்தேர் (துணை நிதி யமைச்சராக செயல்பட்டவர்- 7 முறை எம்எல்ஏவாக இருந்தவர்). முகமது சபி (உரி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ மற்றும் எம்.பி.யாக இருந்தவர்), குலாம் ஹசன் மிர் (பிடிபி தலைவர் - முன்னாள் மாநில அமைச்சர்). இம்ரான் அன்சாரி (பீப்பிள்ஸ் கான்பிரன்ஸ் கட்சியைச் சேர்ந்தவர்- முன்னாள் அமைச்சர்) முபா ரக் குல் (எடிகா தொகுதியில் 4 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்). முகமது அஷ்ரப் மிர் (பிடிபி தலை வர் - முன்னாள் அமைச்சர்). அஜாஸ் மிர் (வழக்கறிஞர் - பிடிபி முன்னாள் எம்எல்ஏ). நூர் முகமது பாத் (பிடிபி முன்னாள் எம்எல்ஏ). குர்ஷித் ஆலம் (பிடிபி-யின் ஸ்ரீநகர் தலைவர்). பஷீர் வீரி (தெற்கு காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்) சயீத் அக்கூன் (தேசிய மாநாட் டுக் கட்சியின் தலைவர்- முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) தன்வீர் சாதிக் (தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர். உமர் அப்துல்லாவின் அரசியல் ஆலோ சகர்). சாஜத் லான் (பீப்பிள்ஸ் கான்பி ரன்ஸ் கட்சித் தலைவர்). ஜூனாய்ட் மட்டு (ஸ்ரீநகரின் மேயர்), ஷேக் இம்ரான் (ஸ்ரீநக ரின் துணை மேயர்). ஷா பைசல் (ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், ஜம்மு - காஷ்மீர் பீப்பிள்ஸ் மூமெண்ட் இயக்கத்தை நடத்தி வருபவர்). வஹீத் பர்ரா (பிடிபி இளைஞரணி செய லாளர்). குலாம் அகமது மிர் (பிரதேஷ் காங்கிரஸ் கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ), சைபுதீன் சோஸ் (பிரதேஷ் காங்கிரஸ் முன்னாள் தலை வர், எம்.பி., அமைச்சராக இருந்தவர்). நயீம் அக்தர் (பிடிபி கட்சி முன்னாள் அமைச்சர்). ஹக்கிம் யாசின் (ஜம்மு - காஷ்மீர் பீப்பிள்ஸ் டெமாக்ரடிக் ப்ரண்ட் கட்சித் தலைவர்- முன்னாள் எம்எல்ஏ).