tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும் - மாணவர்கள் கூட்டமைப்பு

குடியுரிமை திருத்த  சட்டத்தை கண்டித்து நடைபெற்று வரும் எங்கள் போராட்டம்  விடுமுறை முடிந்து, கல்லூரி திறக்கும் போதும் தொடரும் என கோவையில்  மாணவர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து மாணவர் அமைப்பினர், கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பலகட்ட போராட்டங்களைக் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கோவையிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய மாணவர் சங்கத்தினர், சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு மாணவர் இயக்கங்கள் ஒன்றிணைந்த மாணவர் கூட்டமைப்பினர் சார்பில் கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தைக் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. மாணவர்கள் போராட்டத்தினால் கல்லூரிகளை வருகின்ற 2 ஆம் தேதி வரை மூடினாலும் விடுமுறை முடிந்த கல்லூரி திறப்பின் போதும் நாங்கள் இந்த சட்டத்தைக் திரும்ப பெறும் வரை  தொடர்ந்து போராடுவோம் என அவர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய 50 க்கு மேற்பட்டோரைக்  காவல்துறையினர் கைது செய்தனர்.