tamilnadu

img

அமெரிக்காவிடம் 72 ஆயிரம் துப்பாக்கிகளுக்கு ஆர்டர்...

புதுதில்லி:
அமெரிக்காவிலிருந்து 72 ஆயிரம் சிக்-716 (Sig 716) ரக தாக்குதல் துப்பாக்கிகளை வாங்குவதற்கு இந்திய இராணுவம் முடிவுசெய்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு நட வடிக்கைகளை அதிகரிப்பதற்காக இந்திய ராணுவம் சிக் சாவர் தாக்குதல் துப்பாக்கிகளை அமெரிக்காவிட மிருந்து பெற்றது. பாஸ்ட் டிராக் கொள்முதல் (FTP) திட்டத்தின் கீழ் இந்திய ராணுவம் இந்த துப்பாக்கிகளை வாங்கியது. தற்போது, எல்லையில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலின் பின்னணியில், ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்ட நிதி அதிகாரங்களின் கீழ்  புதி தாக 72 ஆயிரம் துப்பாக்கிகளுக்கு இந்திய ராணுவம் ஆர்டர் கொடுத்து ள்ளது.ஏற்கெனவே ஆர்டர் செய்துள்ள 72 ஆயிரம் துப்பாக்கிகள் டெலிவரி செய்யப்பட்டவுடன், இரண்டாவது தொகுதிக்கான ஆர்டர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவற்றின்படி சுமார் 1.5 லட்சம் இறக்குமதி செய்யப்பட்ட துப்பாக்கி கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும், எல்லையில் காவல் பணியில் (LoC) உள்ள வீரர்களுக்கும் வழங்கப்படும். மீதமுள்ள படைகளுக்கு AK-203 துப்பாக்கிகள் வழங்கப்படும். 

ராணுவத்தில், துப்பாக்கிகளின் பற்றாக்குறையைப் போக்க, இஸ்ரேலில் இருந்து 16 ஆயிரம் லைட் மெஷின் துப்பாக்கிகள் (LMG) வாங்குவதற்கும் பாதுகாப்பு அமைச்சகம்அண்மையில் உத்தரவு பிறப்பித் திருப்பது குறிப்பிடத்தக்கது.

;