tamilnadu

img

சீனாவுடனான கருத்து வேறுபாடு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்... இந்திய ராணுவ தளபதி பேட்டி

புதுதில்லி:
சீனாவுடன்  தூதரகம் மற்றும்  ராணுவ ரீதியாக  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் சீனாவுடனானகருத்து வேறுபாடு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்றும் இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார்.

ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, லே பகுதிக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகளு டன் ஆய்வு செய்தார்.இதன்பின்னர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு ராணுவ தளபதி அளித்த பேட்டியில், நாம் சீனாவுடன் தூதரக ரீதியிலும், ராணுவ ரீதியிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த பேச்சுவார்த்தை எதிர்காலத்திலும்தொடரும். இரு நாடுகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என நம்புகிறேன். எல்லையில் தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை உறுதி செய்கிறேன். நமது நலன்களை, நம்மால் பாதுகாக்க முடியும்.சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நம் பாதுகாப்புக்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நம் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வண்ணம் சில படைகளை நிறுத்தியுள்ளோம்.லேயில் பல இடங்களுக்கு சென்றேன். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். நமது வீரர்கள் மன உறுதியுடன் உள்ளனர். அவர்கள் எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளனர்” என்றார்.