tamilnadu

img

அமெரிக்க உளறலை நீங்களும் பூசி மெழுகாதீர்கள்....மோடிக்கு தெரியாததை சொல்லியாவது கொடுங்கள்...

புதுதில்லி:
அண்மையில் அமெரிக்கா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திரமோடி, ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ‘ஹவுதி மோடி’ (மோடி நலமா?) என்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார். அமெரிக்கவாழ் இந்தியர்கள் 50 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், யாரும்எதிர்பாராத விதமாக, பிரதமர் மோடி திடீரென- அமெரிக்க ஜனாதிபதிக்கு வாக்கு சேகரிக்க ஆரம்பித்து விட்டார். அதுவும் அவரது ஸ்டைலில், “ஆப்கி பார், ட்ரம்ப் சர்க்கார்”(இந்த முறையும் ட்ரம்ப் அரசுதான்) என்று கூறி கைத்தட்டல்களையும் அள்ளினார்.

இவ்வளவுக்கும் அந்த நிகழ்ச்சியில், ஆளும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும்,அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மட்டுமன்றி, அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர். ஆனால், அமெரிக்காவின் ஆளும் கட்சி,எதிர்க்கட்சி ஆகிய இரண்டுக்கும் தான் பொதுவானவர்; தன்னை வரவேற்க டிரம்ப்புடன், எதிர்க்கட்சித் தலைவர்கள் வந்திருப்பதும்கூட அதனால்தான் என்ற அனைத்தையுமே மோடி மறந்து விட்டார்.இந்தியாவின் பிரதமர் என்ற வகையிலேயே, தான் அமெரிக்காவிற்கு வந்துள்ளதையும், இங்கு குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்குசேகரிப்பது, அந்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகி விடும் என்றகுறைந்தபட்ச புரிதல் கூட இல்லாமல் மோடிநடந்து கொண்டார். அப்போதே, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மோடிகுழிதோண்டி புதைத்து விட்டார் என்று விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், மோடிஅதனை கண்டுகொள்ளவில்லை.

இதனிடையே, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தற்போதுஅமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவரிடம் வாஷிங்டனில் அமெரிக்க பத்திரிகையாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பியுள்ளனர். நேரடியாக அவர்களிடம் மாட்டிக் கொண்ட ஜெய்சங்கர், ‘ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்’ என்பதை தேர்தல் பிரச்சாரமாக மோடி மேற்கொள்ளவில்லை; அவர் கடந்தகாலத்தைப் பற்றியே பேசினார்.. தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடியுள்ளார்.இந்நிலையில், மோடியின் பிரச்சாரம் குறித்தும், அதற்கு ஜெய்சங்கர் தற்போது விளக்கம் அளித்துக் கொண்டிருப்பதையும் குறிப்பிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைவெளியிட்டுள்ளார்.அதில், “நன்றி ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் திறமையின்மையை நீங்கள் நன்றாக மறைக்கிறீர்கள். பிரதமர் மோடியின் ஒரு சார்பு ஒப்புதலால் ஜனநாயக கட்சியினர் இந்தியாவுடன் கொண்டிருந்த இணக்கமான சூழலில் சிக்கல் ஏற்பட்டுள் ளது. சிக்கலைத் தீர்க்க நீங்கள் தலையிடுகிறீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இந்த விவகாரம் பற்றி பேசும் நீங்கள் பிரதமர் மோடிக்குராஜீய உறவுகள் தொடர்பாக குறைந்தபட்சமாவது கற்றுக் கொடுங்கள்” என்று ராகுல் கூறியுள்ளார்.

;