நாடாளுமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பெகாசஸ் வேவு மென்பொருள் என்பது இஸ்ரேலால் உருவாக்கப்பட்ட ஓர் ஆயுதம். இதனைப் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எங்களுக்கு எதிராகப் பயன்படுத்துகின்றனர். இது உச்சநீதிமன்ற நீதிபதியால் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்திட வேண்டும்.” என்று கூறினார்