tamilnadu

img

என் மதிப்பு மோடிக்கு தெரியவில்லை நான் சீனாவுக்கு போகிறேன்...

புதுதில்லி:
பிரதமர் மோடி, பொருளாதாரம் தொடர்பான தனது ஆலோசனைகளை கொஞ்சம் கூட கேட்க மறுப்பதாக,பாஜக மூத்தத் தலைவரும்,அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியசாமி வருத்தப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பொருளாதாரம் தொடர் பான எனது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை, செவிமடுக்க, பிரதமர் நரேந்திர மோடி தயாராக இல்லை.எனவே, நான் சீனாவுக்கு செல்ல வேண்டியது இருக்கலாம். அந்நாட்டின் புகழ்பெற்ற சிங்குவா பல்கலைக்கழகம், செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள கருத்தரங்கில் உரையாற்றுவதற்கு என்னைஅழைத்துள்ளது.‘சீனாவின் பொருளாதார மேம்பாடு: கடந்த 70 ஆண்டுகளின் மதிப்பாய்வு’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கருத்தரங்கில் ஏராளமான பொருளாதார அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். அதில் உரையாற்றுவதற்கே என்னை அப்பல்கலைக்கழகம் அழைத்துள்ளது, என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

;