tamilnadu

img

முன்பே என் தந்தை பாஜகவை விட்டு விலகியிருக்க வேண்டும் சத்ருகன் சின்கா மகள் பேட்டி

பாஜக மூத்த தலைவரும், நடிகருமான சத்ருகன் சின்ஹா பாஜக-விலிருந்து விலகி, ஏப்ரல் 6-ஆம் தேதி காங்கிரசில் இணைவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், சத்ருகன் சின்காவின் இந்த முடிவு பற்றி, அவரது மகளும் ‘லிங்கா’ திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தவருமான சோனாக்சி சின்காகருத்து தெரிவித்துள்ளார். அதில் என் தந்தை முன்பே பாஜகவை விட்டு விலகியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.“ஜெயப்பிரகாஷ் நாராயணன், அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோர் காலத்திலிருந்தே என் தந்தை கட்சியில் இருக்கிறார்; இவர்கள் இருந்தவரை எனது தந்தைக்கு பாஜக கட்சிக்குள் நிறைய மரியாதை இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக என்தந்தைக்கு மட்டுமன்றி, அடல்ஜி மற்றும் அத்வானிஜி ஆகியோருக்கும் பாஜக-வில் உரிய மரியாதை வழங்கவில்லை என நான் உணர்கிறேன். மேலும் என் தந்தை மிக காலதாமதமாகவே இந்த முடிவை எடுத்திருப்பதாக பார்க்கிறேன். முன்பே இந்த முடிவை அவர் எடுத்திருக்க வேண்டும் என கருதுகிறேன்” என்று சேனாக்சி சின்கா கூறியுள்ளார்.


;