புதுக்கோட்டை, செப்.26- கடந்த 8 மாதங்களாக சம்ப ளம் வழங்காததைக் கண்டித்து பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் புதுக்கோட்டையில் வியாழக்கிழ மையன்று வேலை நிறுத்தப் போரா ட்டத்தைத் தொடங்கினர். பிஎஸ்என்எல் பொதுத்துறை யில் பணியாற்றும் ஒப்பந்த ஊழி யர்களுக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும், 50 சதமான ஒப்பந்த ஊழி யர்களை ஆட்குறைப்பு நட வடிக்கை எடுப்பதற்கு நிர்வாகம் முயற்சித்து வருகிறது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு உள் ளாகி தற்கொலைக்கு தள்ளும் நட வடிக்கையை நிர்வாகம் மேற் கொண்டுள்ளதாக ஒப்பந்த ஊழி யர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சம்பள நிலுவைத் தொகை உடனடியாக வழங்குவ தோடு, ஆட்குறைப்பு நடவடிக்கை யில் நிர்வாகம் ஈடுபடக்கூடாது என வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வரு கிறது. போராட்டத்திற்கு தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழி லாளர் சங்கத்தின் புதுக்கோட்டை கிளை நிர்வாகி பி.சரவணன் தலை மை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநில செயற்குழு உறுப்பி னர் ஆர்.கல்லடியான், தமுஎகச மாநில நிர்வாகி கவிஞர் நா.முத்து நிலவன் மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் மாரியப்பன், மல்லிகா, பூம்பாவை, சீதாலெட்சுமி, விஸ்வ நாதன், பாஸ்கர், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.
கும்பகோணம்
.கும்பகோணம் தொலைத் தொடர்பு அலுவலகம் முன் மாவட்ட தொலைதொடர்பு ஒப்பந்த தொழி லாளர்கள் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப் பாட்டத்தில் சங்க மாவட்ட தலை வர் பாலாஜி செயலாளர் நித்தியா னந்தம் பொருளாளர் பார்த்திபன் உட்பட ஏராளமான ஒப்பந்த தொழி லாளர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் ஆதரவு தெரி வித்தது
திருச்சிராப்பள்ளி
திருச்சி தொலை தொடர்புத் துறை பிஜிஎம் அலுவலக வளா கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி பிஎஸ்என்எல்இயு மாவட்ட தலை வர் தேவராஜ், மாவட்ட துணைத் தலைவர் ராஜப்பா, கிளைச் செய லாளர் அன்பழகன், சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், தமிழ் நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் முபாரக் மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். முடிவில் தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழி லாளர் சங்க மாவட்ட பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.