tamilnadu

img

மோட்டார் வாகன சட்டத் திருத்தம் ஊழலுக்கே வழி வகுக்கும்!

புதுதில்லி:
மத்திய பாஜக அரசானது,மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, அதனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது. இந்த திருத்தச் சட்டத்தின்மூலம், வாகனங்களுக் கான வரி, உரிமக் கட்டணங்கள் பன்மடங்கு அதிகரிக் கப்பட்டு இருப்பதுடன், போக்குவரத்துக் குற்றங்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனையும் கடுமை ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போக்குவரத்து ஆர்வலரான ரோகித் பகுஜ என்பவர், மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் உள்துறை அமைச்சர்அமித் ஷா ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின் மூலம், ஊழல் மற்றும் குழப்பங்களுக்கு வழி ஏற்படுத்தப் பட்டுள்ளது. பொதுமக்கள் சித்ரவதையை அனுபவிப் பார்கள். போக்குவரத்துக் காவலர்களுக்கு அனைத்து வாகன ஓட்டிகளும் ‘ஏடிஎம்’ போல தெரிவார்கள். அதிகமான அபராதம் செலுத்த வேண்டும் என்று மிரட்டியே லஞ்சத்தை அதிகரிப்பதற்கு புதிய சட்டம் வசதி செய்துதருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

;