tamilnadu

img

கழிவு பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து முகக்கவசம்

புதுதில்லி:
ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள், வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய முகக்கவசங்களை விட முப்பது முறை வரை கழுவி மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களை, கழிவு பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர். இதற்கு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (மண்டி) குழு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளது.கழிவு பிளாஸ்டிக் பாட்டில்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டிய ஆராய்ச்சி மாணவர்கள் அதை நானோ ஃபைபர்களின் கலவையைப் பயன்படுத்தி கரைத்துள்ளனர்.இது குறித்து ஐ.ஐ.டி மண்டியின் உதவிப்பேராசிரியர் சுமித் சின்ஹா ரே கூறுகையில், “பிளாஸ்டிக்கால் ஆன மாஸ்க்கை பயன்படுத்தலாமா? என்பதை விட அது பாதுகாப்பனதா? என்பதுதான் முக்கியம். நானோ ஃபைபர்கள் பாக்டீரியா மற்றும் தொற்று கூறுகளைத் தவிர்த்து பயனாளியின் பாதுகாப்புத் தேவைகளை பூர்த்தி செய்கிறது. வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய முகக்கவசங்களை இந்த நானோ பிளாஸ்டிக் முகக்கவசங்களில் சுவாசிப்பது எளிமையானது மட்டுமல்ல சிறப்பானதும் கூட. ஆய்வகத்தில் ஒரு முகக்கவசத்தை தயாரிக்க ரூ.25 செலவாகிறது. வணிக ரீதியாக உற்பத்தி செய்யும் போதுஇதன் செலவு பாதியாகக் குறையும். இந்த முகக்கவசத்தை கழுவி கழுவி 30 முறைகள் பயன்படுத்தலாம். நானோ ஃபைப்ஸ் அடிப்படையிலான முகமூடிகள் சுவாசிக்க வசதியாக இருக்கும். அதே நேரத்தில் சிறிய துகள்களை திறம்பட வடிகட்டும்”என்றார்.நிறுவனத்தின் ஆராய்ச்சி அறிஞரும் குழு உறுப்பினர்களில் ஒருவருமான ஆஷிஷ் ககோரியா கூறுகையில், “இதிலுள்ள அல்ட்ராஃபைன் இழைகள் சுவாசத்தை மேம்படுத்தும்‘ ஸ்லிப் ஃப்ளோ ’என்ற தனித்துவமான நிகழ்வின் காரணமாக காற்றில் உள்ள மாசைகட்டுப்படுத்துகின்றன” என்றார்.

;