புதுதில்லி:
கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களே சுத்தம் செய்வதைத் தடைசெய்யும் சட்டத்தை மேலும் கடுமையாக்க புதிய விதிகளை சேர்க்கும் வகையில் வரும் மழைக் காலக் கூட்டத்தொடரில் புதிய மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் இந்தமசோதா தேசிய செயல் திட்டத் தின் கீழ் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாட்டிலிருந்து முழுமையாககழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள்சுத்தம் செய்யும் முறையை நீக்குதல் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.தேசிய செயல்திட்டத்தின் நோக்கத்தின்படி, கழிவுநீர்தொட்டிகளை சுத்தம் செய்ய தற்போதும்நடைமுறைகளை மேம்படுத்துவது, எந்திரங்கள் மூலம் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல், அவசர உதவி அமைப்பு போன்றவற்றை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.மனிதக்கழிவுகளை மனிதர்களே அள்ளுதல், கழிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தலுக்கு தடை ஆகியவற்றுக்காக தனியாகச் சட்டம் இயற்றி நடைமுறையில் இருக்கிறது.
இந்த சட்டத்தின்கீழ் ஆபத் தான கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன் படுத்தினால் மனிதர்களை பயன்படுத்தும் நிறுவனம், தனிநபருக்குரூ.5 லட்சம் அபராதமும் , 5 ஆண்டுசிறை தண்டனையும் விதிக்கப் படும்.இருப்பினும், ஆண்டுதோறும்நாடுமுழுவதும் பல்வேறு நகரங்களில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்கள் இறங்கி,விஷவாயு தாக்கி உயிரிழப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த முறையை முழுமையாக நீக்க வேண்டும், அதற்கு ஏற்கெனவே இருக்கும் சட்டத்தை செம்மைப்படுத்தும் நோக்கில் புதிய கடினமான விதிகளைச் சேர்த்து மசோதா அறிமுகமாக உள்ளது.இதுகுறித்து சமூகநீதித்துறை அதிகாரிகள் கூறுகையில், “கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்ததடை மற்றும் மறுவாழ்வு திருத்த மசோதா ஏற்கெனவே இருக்கிறது.கழிவுநீர் தொட்டிகளை சுத்தம்செய்தலை முழுமையாக எந்திரமயமாக்குதல், பணியில் அதிகமான பாதுகாப்பு, மனிதர்களை பயன்படுத்துவதை தடை செய்யும் விதிகளை கடுமையாக்குதல், சிறைதண்டனை காலத்தை அதிகப்படுத்துதல், அபராதத்தை அதிகப்படுத்துதல், விபத்து ஏதேனும்நடந்தால் இழப்பீட்டு தொகைபோன்றவற்றை அதிகப்படுத்த இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது எனத் தெரிவித்தனர்.மேலும், இந்த மசோதாவுடன் சேர்த்து மொத்தம் 23 மசோதாக் கள் இந்த மழைக்காலக் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்ய மத் திய அரசு திட்டமிட்டுள்ளது.