பழனி:
பழனி நகரில் 60 கோடி ரூபாய் மதிப்பில் சாக்கடை கால்வாய் திட்டத்தை நெடுஞ் சாலைத்துறை நிறைவேற்றி வருகிறது. நகரின் முக்கிய சாலைகளில் நடைபெறும் இத்திட்டப் பணி குறைந்தபட்ச கட்டுமான விதிகளைக்கூட கடைபிடிக்காமல் நடந்து வருகின்றது. வாட்டம் ( level ) இன்றி கட்டப்படுகின்றது. எந்த தகுதி ஆய்வும் மேற்கொள்ளப்படுவதில்ல. முதல்நாள் இரவு போடப்படும் பக்கச்சுவர்களும் அதன் மீது அமைக்கப்படும் சிமெண்ட் பலகைகளும் காங்கிரிட் செட் ஆவதற்கு முன்னதாக மறுநாளே அகற்றப்படுகிறது. குறைந்தது ஒரு வாரம் கூட காங்கிரீட் செட் ஆவதற்கு அனுமதிப்பது இல்லை.க்யூரிங் ஏற்பாடு இல்லை. 60 கோடி ரூபாயும் மண்ணில் போட்டு புதைக்கப்படுகிறது. பெரும்பாலும் இரவு நேரங்களிலும் அரசு விடுமுறை நாட்களிலும் யாருடைய கண்காணிப் புக்கும் வழியின்றி அவசர கதியில் நடைபெறுகிறது.
பாதாளச் சாக்கடை திட்டம் பழநி நகருக்கு வர இருக்கும் நிலையில் இந்தச் சாக்கடை கால்வாய் திட்டமே தேவையற்ற ஒன்றாகும். மக்களின் வரிப்பணம் அநியாயத்திற்கு வீணாகிறது. சார் ஆட்சியர் திட்டப்பணியை ஆய்வு செய்து அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பழனி நகர் மன்றமுன்னாள் தலைவர் வ.ராஜமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.