tamilnadu

img

இந்தியை ஒற்றை மொழியாக்குவது மாநில மொழிகளை தகர்க்கவே!

கொடியேரி பாலகிருஷ்ணன் பேட்டி

தலச்சேரி, செப்.15- ஒற்றை மொழிக் கொள்கையை திணிப்ப தன் வாயிலாக மாநில மொழிகளை தகர்ப்பதே சங்பரிவாரின் நோக்கம் என சிபிஎம் கேரள மாநிலச் செயலாளர் கொடியேரி பால கிருஷ்ணன் தெரிவித்தார்.  தலச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து மேலும் கூறிய தாவது: நாட்டில் மும்மொழிக்கொள்கை பின்பற்றப்படுகிறது. அதை தலைகீழாக மாற்றி ஒற்றை மொழிக் கொள்கையை அமல்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மொழி என்கிற வகையில் இந் திக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்பட் டுள்ளது. அதை அங்கீகரித்தே நாட்டில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட் டது. ஒவ்வொரு மாநிலத்தின் மொழிகளுக் கும் ஒரேவிதமாக முக்கியத்துவம் அளிக்கும் மொழிக் கொள்கையாகும் இது. இதற்கு பதி லாக இந்தியை ஒற்றை மொழியாக்குவது வட்டார மொழிகளை தகர்ப்பதற்கே. நாட்டின் பன்முகத்தன்மையை தகர்க்கவே ஒரு மொழி, ஒரு நாடு, ஒரே கலாச்சாரம் என்கிற முழக்கத்து டன் ஆர்எஸ்எஸ் வருகிறது. இது இந்தி பேசாத மாநிலங்களில் மோசமான பின்விளைவு களை ஏற்படுத்தும்.  இந்தி திணிப்புக்கு எதிராக ஏற்கெனவே தமிழ்நாட்டில் பெரும் பேரெழுச்சி நடந்துள் ளது. அப்படித்தான் ஒவ்வொரு மாநில மொழி களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. கேரளத்தில் மலை யாளம் ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. அதோடு செம்மொழி தகுதி பெற்ற மொழியாகும். மலையாளத்திற்கு பதிலாக இந்தியை திணிப்பது மக்களுக்கு விடுக்கப் படும் சவாலாகும். 

குடியுரிமை பதிவின் பெயரால் அசாமில் 20 லட்சம் மக்களை வெளியேற்றியதுபோல நாளை இந்தி தெரியாதவர்கள் எல்லோரும் வெளியேற வேண்டிய நிலையும் ஏற்படும். அனைத்துப் பகுதிகளிலும் புதிய பிரச்சனை களை தட்டி எழுப்பும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை புரிந்துகொள்ள வேண்டும். இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறினார்.

சித்தராமையா

கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கூறுகையில், “இந்திதான் தேசிய மொழி என பொய்ப் பிரச்சாரம் செய் வதை நிறுத்துங்கள்” என குறிப்பிட்டுள்ளார். ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பின ரும் அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இதிஹாதுல் முஸ்லிமீன் தலைவருமான அசாதுதீன் ஓவைசி கூறுகையில், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 29, இந்திய குடிமக்கள் தங்களது தாய் மொழிகளை பயன்படுத்துவதற்கு உரி மையை வழங்கியுள்ளது என்றார்.