tamilnadu

img

ஜூன் 1- காங். எம்.பி.க்கள் கூட்டம் 

புதுதில்லி:
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில், காங்கிரசின் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தியும், மக்களவை கட்சித் தலைவராக ராகுலும் தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவையில் காங்கிரசுக்கு 52 இடங்களே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.