tamilnadu

img

பட்டினி நாடுகள் பட்டியலில் முன்னேறும் இந்தியா!

புதுதில்லி:
பட்டினி கிடப்போர் மற்றும் போதியஊட்டச்சத்து கிடைக்காத குழந்தைகளை அதிகம் கொண்டிருக்கும் நாடுகளில், இந்தியா முன்னணியில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்த விஷயத்தில், அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசத்தை விடவும் இந்தியா மோசமான நிலையில் இருப்பதாகவும் அந்த ஆய் வில் கூறப்பட்டுள்ளது.அயர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த- மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான 2 நிறுவனங்கள்,உலகில் பட்டினி கிடப்போர் (2019 Global Hunger Index) குறித்து ஆய்வு செய்து, புள்ளிகள் வாரியாக நாடுகளைத் தரவரிசைப்படுத்தியுள்ளது. இதன்படி பூஜியம் பெறும் நாடு பசியில்லாத நாடுஎன்றும் 100 புள்ளிகள் வரை பெறும் நாடுகள் பசி மிகுந்த நாடுகள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

குழந்தைகளுக்குக் கிடைக்கும் சத்தான உணவு, உணவை வீணாக்கும் அளவு, ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளின் எடை மற்றும் உயரம்,குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆகியவையே ஆய்வுக்கான காரணிகளாகும். இதில்தான், 30.3 புள்ளிகளுடன், மொத்தமுள்ள 117 நாடுகளில் 102-ஆவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.இந்தப் பட்டியலில் அண்டை நாடுகளான பாகிஸ்தான் (94), வங்கதேசம் (88) மற்றும் நேபாளம் (73), இலங்கை(66) ஆகிய நாடுகள் இந்தியாவை விடமுன்னணியில் உள்ளன. தெற்காசியாவின் மற்ற நாடுகள் அனைத்துமே 66 முதல் 94-ஆவது இடங்களுக்கு இடையில் உள்ளன. மியான்மர் (69), சீனா(25) உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவை விட முன்னேறி உள்ளன. ஆனால், இந் தியா மட்டுமே 102-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.அதுமட்டுமல்ல, வறுமைக்குப் பெயர்போன நைஜீரியா, கானா, கென்யா, எத்தியோப்பியா உள்ளிட்டஆப்பிரிக்க நாடுகளைக் காட்டிலும் இந்தியா பின்தங்கி கீழே போயிருக்கிறது.

கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் இந்தியாவுக்கு பின்னர் 16 நாடுகள் இருந்த நிலையில், இந்த ஆண்டு இந்தியாவுக்கு பின்னால் 15 நாடுகள் மட்டுமே உள்ளன.2014-ஆம் ஆண்டில், மொத்தம் கணக்கில் கொள்ளப்பட்ட 76 நாடுகளில், இந்தியா 55-ஆவது இடத்தைப் பெற்றிருந்தது. 2017-இல் 119 நாடுகளில் 100-ஆவது இடத்தையும், 2018-இல் 119 நாடுகளில் 103-ஆவது இடத்தையும் பிடித்தது. தற்போது 117 நாடுகளில் 102-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.ஒவ்வொரு வருட பசி பட்டியலிலும் இந்தியா பின்னோக்கியே செல்கிறது என்று குறிப்பிட்டுள்ள இந்த ஆய்வு, தொடரும் பிரச்சனையை இந்தியா உடனடியாக கவனத்தில் கொள்வது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளது.தீவிரமான பசி நெருக்கடி நிலவும் நாடுகளாக, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, ஏமன், மலேசியா, மடகாஸ்கர்,வெனிசுலா, லெபனான், மவுரித்தேனியா,ஜோர்டான் உள்ளிட்டவை பட்டியலிடப்பட்டு உள்ளன.உலகம் முழுவதும், 2018-ஆம் ஆண்டில் 785 மில்லியன் மக்கள் பசியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2019-இல் அந்த எண்ணிக்கை822 மில்லியனாக அதிகரித்து இருப்பதாகவும் அறிக்கை கண்டறிந்துள்ளது.

;