புதுதில்லி,ஜூன் 18 - இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 334 பேர் உயிரி ழந்துள்ளனர். தொடர்ந்து 7-வது நாளாக பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒட்டுமொத்த மாக கொரோனாவால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்து 946 பேராக அதி கரித்துள்ளது. இதில் குணமடைந் தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 324 ஆகவும், சிகிச்சை யில் இருப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 384 ஆகவும் இருக்கிறது. இந்தியாவில் கொரோ னாவில் குணமடைந்து வருவோர் சதவீதம் 52.95 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் புதனன்று 334 பேர் உயிரிழந்த நிலையில் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயி ரத்து 237 பேராக அதிகரித்துள்ளது.