tamilnadu

img

ரபேல் வழக்கில் கே.எம். ஜோசப் அதிரடி

புதுதில்லி:
ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பிலான, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மாபெரும்ஊழல் நடந்திருப்பதாக  குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், உச்சநீதிமன்றம் அந்த குற்றச்சாட்டுக்களை, கடந்த 2018 டிசம்பரில்தள்ளுபடி செய்தது. எனினும், மனுதாரர்கள் மறு ஆய்வுமனு தாக்கல் செய்ததால், அவற்றின் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே. கவுல், கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு மீண்டும் விசாரணை நடத்தி, வியாழக்கிழமையன்று தீர்ப்பு வழங்கியது. 

அதில், தங்களின் முந்தைய தீர்ப்பையே உறுதிப்படுத்திய நீதிபதிகள், ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததற்கான முகாந்திரம் எதுவும் இல்லை; அதனால் விசாரணை தேவை இல்லை, எப்ஐஆர் பதிய வேண்டியதும் இல்லை என்று கூறிவிட்டனர்.இதுமூன்று நீதிபதிகளின் ஒருமித்ததீர்ப்புதான் என்றாலும், அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி கே.எம். ஜோசப், அவரது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்த வரிகள் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளன.அதாவது, ரபேல் தீர்ப்பில் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் எஸ்.கே.கவுல் ஆகியோருடன்  நீதிபதி ஜோசப் ஒத்துப்போனாலும், “வழக்கில் ஆதாரம் இருக்கும்பட்சத்தில் மனுதாரர்கள் சிபிஐ அமைப்பை அணுகி, எப்ஐஆர் பதிவுசெய்ய  முறையிடலாம். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, மத்திய அரசின் முன் அனுமதிபெற வேண்டும் என்ற வகையில், சிபிஐ-யும். ஊழல் தடுப்புச்சட்டம் 17ஏ-இன் படி, மத்திய அரசிடம் அனுமதி பெற்று ரபேல் வழக்கை விசாரிக்கலாம்” என்று தீர்ப்பில் குறிப்பிட்டிருந்த வரிகள், ரபேல் விவகாரத்தை உச்சநீதிமன்றம் ஒரேயடியாக நிராகரித்து விடவில்லை; தேவைப் பட்டால், இந்த வழக்கை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான வாய்ப்பையும் வழங்குவதாக அமைந்துள்ளன.இதனைக் குறிப்பிட்டே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், “ரபேல் ஊழல் தொடர்பாக நீதிபதி ஜோசப் மிகப்பெரிய கதவைத் திறந்து வைத்துள்ளார். இனி முழு வீச்சில் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஊழலை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

;