tamilnadu

img

காசியின் பாலியல் வன்கொடுமைகள் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் - மாதர்கள் கைது

நாகர்கோவில், மே 21- நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்கிற சுஜி தொடர்பான பாலியல் வன்கொடுமை விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கன்னியா குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தனிமனித இடைவெளியை பின்பற்றி ஆர்ப்பாட்டம் நடத்தியபோதும் சங்க நிர்வாகிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.

நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தச் சேர்ந்தவர் காசி என்கிற சுஜி (26). இவர் சென்னையை சார்ந்த பெண் மருத்து வர் உள்ளிட்ட பல பெண்களை ஏமாற்றி வசப்படுத்தி ஆபாசமாக படம் எடுத்து பணம் பறித்து வந்துள்ளார். பெண் மருத்துவர் அளித்த புகாரின்பேரில் காசி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கைப்பற் றப்பட்ட லேப்டாப், செல்பேசி பதிவுகள் மூலம் சிறுமிகள், பெண்கள் என சுமார் 80 பேரை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியது தெரியவந்துள்ளது.

காசி யின் சமூக விரோத செயல்களில் கூட்டாளி களாக பிரபலங்கள் பலரது மகன்கள் இருந்துள்ளனர். அவர்கள் தங்களது செல் வாக்கை பயன்படுத்தி காசியை விடுவிக்க வும், வழக்கை சிதைக்கவும் முயன்று வருவ தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி நியாயமான முறையில் நீதிமன் றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். காசியின் பாலியல் மோசடி களில் கூட்டாக செயல்பட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பெண் கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.

எனவே தமிழக அரசு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான இதுபோன்ற குற்றச்செயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ரகு பதி தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் என்.உஷாபாசி உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாதர் சங்க நிர்வாகிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.