tamilnadu

img

சுகாதார நலத்திட்டங்கள் குறித்த பி.ஆர். நடராஜன் கேள்விக்கு அமைச்சர் பதில்

புதுதில்லி:
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர், சிகிச்சையின் பொருட்டுஉடனடியாக  பணம் செலுத்துவதை தவிர்க்க, சி.ஜி.எச்.எஸ்  மருத்துவ மனைகள் / ஆரோக்கிய மைய வசதிகள்அதிகமான இடங்களில் தேவைப்படுகிறது. இதை அரசாங்கம் அறிந்திருக் கிறதா அப்படியானால், நாடு முழுவதும்கூடுதல் சிஜிஹெச்எஸ்/ஆரோக்கிய மையங்களைத் திறக்க எடுக்கப்பட்ட அல்லது எடுக்கப்படக்கூடிய முடிவுகளின் விவரங்கள் குறித்தும் கடந்த ஐந்துஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் மற்றும் நடப்பு ஆண்டிலும் இதற்காக  ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினார். நிதி ஒதுக்கப்படவில்லை என்றால் அதற்கான கார ணங்கள் குறித்து விளக்கம் கேட்டார்.

பி.ஆர். நடராஜன்  கேள்விகளுக்கு சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே அளித்துள்ள பதில் பின்வருமாறு:​மத்திய அரசு ஊழியர்களுக்கு மருத்துவ சிகிச்சை வசதிகள் மத்திய அரசின்  சுகாதாரத் திட்டத்தின் (CGHS)மூலமாகவோ அல்லது மத்திய சேவை கள் (மெடிக்கல் அட்டென்டன்ஸ்) CS (MA)விதிகள், 1944 இன் மூலமாகவோ அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன.இந்த  இரு முறைகளிலும், பட்டியலிடப்பட்ட மருத்துவமனை களில்,   சேர்ந்து சிகிச்சை பெற்ற செலவைஅரசு ஊழியருக்கு அரசு திருப்பிச் செலுத்துகிறது. புற நோயாளிகள்  சிகிச்சையைப் பொறுத்தவரை, பயனாளிகள், CGHஆரோக்கிய மையத்திற்கு எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை, அதேசமயம், CS (MA) விதிகள், 1944 இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ உதவியாளர் வழங்கிய OPD சிகிச்சைக்கான செலவு சம்பந்தப்பட்ட அரசு ஊழியரின் அலுவலகத்தால் திருப்பிச் செலுத்தப்படுகிறது.

மத்திய அரசின், மத்திய சுகாதாரத்திட்ட ஆரோக்கிய மைய (CGHS) பகுதிகளில் வசிக்கும் மத்திய அரசுஓய்வூதியதாரர்களுக்கு, உட்புற மற்றும் வெளிப்புற மருத்துவ சிகிச்சை வசதிகள் சிஜிஹெச்எஸ் மூலம்திட்டத்தின் குறிப்பிட்ட அளவீடு களுக்குட்பட்டு வழங்கப்படுகின்றன. CGHSக்கு உட்படாத பகுதிகளில் வசிக்கும் மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வொரு மாதமும் நிலையான மருத்துவப் படியினைப் பெறலாம். தேவையான சந்தாவை செலுத்து வதன் மூலம் அருகிலுள்ள CGHS க்கு உட்பட்ட நகரத்திலிருந்து  CGHS வசதியைப் பெறுவதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு உண்டு.  2014 ஆம் ஆண்டில்,  CGHS திட்டம், 25 நகரங்களில் 273அலோபதி ஆரோக்கிய மையங்களு டன் செயல்பட்டு வந்தது. இத்திட்டம், 328அலோபதி ஆரோக்கிய மையங்களு டன்  71 நகரங்களுக்கு  இது நீட்டிக்கப் பட்டுள்ளது.புதிய CGHS ஆரோக்கிய மையங்களைத் திறப்பது குறித்து தனித்  திட்டம்எதுவும் இல்லை. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட்டில் இருந்து, CGHS க்கு என, ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து இந்தநோக்கத்திற்கான செலவு செய்யப் படுகிறது.நாட்டிலுள்ள CGHS ஆரோக்கிய மையங்கள் பற்றிய விபரங்கள்:

வருடம்: 2014
CGHS க்கு உட்பட்ட நகரங்கள்: 25
ஆரோக்கிய மைய எண்ணிக்கை: 273
வருடம்: 2019
CGHS க்கு உட்பட்ட நகரங்கள்: 71
ஆரோக்கிய மைய எண்ணிக்கை: 328

;