tamilnadu

img

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம்...  குழப்பத்தில் தொண்டர்கள்...  

தில்லி 
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி (74) வியாழனன்று இரவு 7 மணியளவில் தில்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான  கங்கா ராமில் அனுமதிக்கப்பட்டார். எவ்வித அறிவிப்பின்றி சோனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் காங்கிரஸ் தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர்.

இதனால் மருத்துவமனை நிர்வாகம் சோனியாவிற்கு சாதாரண உடல் பரிசோதனை தான் தெரிவித்தது. ஆனாலும் சோனியா பரிசோதனை முடிந்து வீடு திரும்பவில்லை. தொடர்ந்து 2 நாட்கள் மருத்துவமனையில் தான் இருந்தார். 

இந்நிலையில், மீண்டும் தனது அறிக்கையை வெளியிட்ட கங்கா ராம் நிர்வாகம் சோனியா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வழக்கமான பரிசோதனை என்கிறார்கள்.ஆனால் உடல்நிலை முன்னேற்றம் என்று சொல்லுகிறார்கள். அவருக்கு என்ன பிரச்சனை என்று சொல்லவில்லை. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.