tamilnadu

img

தனியார் பள்ளியில் இருந்து தலித் குழந்தைகள் நீக்கம்!

கோரக்பூர்:
உத்தரப்பிரதேச மாநிலத்தில்,கல்விக் கட்டணம் செலுத்த வில்லை என்ற காரணத்தைக் கூறி, தலித் குழந்தைகள் நான்கு பேர் பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டத்தில், ‘சரஸ்வதி சிசு வித்யா மந்திர்’ என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வந்தவீரஜ் (4), யுவராஜ் (8), ஜோதி (10), சன்ச்சல் (14) ஆகிய குழந்தைகள் கல்விக் கட்டணம் செலுத்த இயலாத காரணத்தால்கடந்த மாதம் 30-ஆம் தேதிபள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குழந்தை களின் தந்தை சிவகுமார், பள்ளி முதல்வரைச் சந்தித்து, ‘உடனடியாக கட்டணம் செலுத்த முடியவில்லை; கூடுதல் கால அவகாசம்தாருங்கள்’ என்று கோரிக்கை விடுப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது, பள்ளியின் முதல்வர், சிவகுமாரை சாதி ரீதியாக பேசித் தாக்கியுள்ளார்.இது சிவகுமாருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அவர் காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் அவரது புகாரை வாங்க மறுத்துள்ளனர்.இந்நிலையில், சித்தார்த் நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, வியாழக்கிழமையன்று சிவக்குமார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனது குழந்தைகளுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தார். தற்போது இப்பிரச்சனையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சதீஸ் திவேதி தலையிட்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

;