tamilnadu

img

பொருளாதார அறிஞர்களை மிரட்டுவதை முதலில் நிறுத்துங்கள்!

மோடிக்கு சுப்பிரமணியசாமி அறிவுரை


மும்பை, அக்.2- நாட்டைப் பொருளாதாரச் சிக்கல்களி லிருந்து மீட்க விரும்பினால், பிரதமர் மோடி முதலாவதாக, விரும்பத்தகாத உண்மைகளைக் கேட்பதற்கான மன நிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பாஜக மூத்தத் தலைவரும், அக் கட்சியின் எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார். குறிப்பாக, மோடி அரசானது, பொரு ளாதார வல்லுநர்களை மிரட்டும் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக சுப்பிரமணியசாமி மேலும் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் அரசில் வெகு சிலரே தனித்துச் செயல்பட்டு வருகிறார் கள். அப்படிப்பட்டவர்களை, நேருக்கு நேர் எந்தவிதமான குறைகளையும் தன்னிடம் கூறுவதற்கு பிரதமர் மோடி ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால், அந்த மனநிலையை பிரதமர் மோடி இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் குறைவுக்கு மத்திய அரசு கடந்த முறை கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நட வடிக்கையும், ரிசர்வ் வங்கி, நிதி யமைச்சர் முறையாகச் செயல்படாததும் காரணங்களாகும். அதுமட்டுமல்லாமல் வெறுப்பை வரவழைக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டது பொருளாதாரச் சீர்குலைவுக்குக் கார ணம். உயர்வான பொருளாதார வளர்ச்சிக் குத் தேவையான பொருளாதாரக் கொள்கைகளை இன்னும் அரசு புரிந்து கொள்ளவில்லை. இன்றுள்ள சூழலில் நமது பொருளாதாரத்துக்கு குறுகிய கால, நடுத்தர கால, மற்றும் நீண்டகாலத் திட்டங்களுக்கான கொள்கைகள் அவ சியம். ஆனால், அந்தக் கொள்கைகள் அரசிடம் இல்லை. பிரதமரிடம் பொரு ளாதார வல்லுநர்கள் உண்மையான பொருளாதாரச் சூழலைச் சொல்வதற்கு அச்சப்படுவது எனக்குப் பயமாக இருக்கி றது. பிரதமர் மோடி சிறு திட்டங்களில் தான் கவனம் செலுத்துகிறார். அனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பன் முக அணுகுமுறை அவசியமாகும். இவ்வாறு சுப்பிரமணியசாமி கூறி யுள்ளார்.