tamilnadu

img

ஜம்மு-காஷ்மீரில் தகவல் தொடர்புகளை ஏற்படுத்திடுக!

கலைஞர்கள், வரலாற்றறிஞர்கள், கல்வியாளர்கள் அறிக்கை

புதுதில்லி, செப்.21- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தகவல் தொடர்புக ளை மீண்டும் ஏற்படுத்திட வேண்டும் என்று, கலை ஞர்கள், வரலாற்றறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக அக்கறையுடைய குடிமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக, நாட்டிலுள்ள முக்கிய கலை ஞர்கள், வரலாற்று அறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக அக்கறையுடைய குடிமக்கள் ஆகியவர்கள் கூட்டாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். இதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஐந்து வாரங்களுக்கும் மேலாக, தகவல் தொடர்பு இணைப்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டி ருப்பது எங்களை மிகவும் சங்கடத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இது மக்களுக்கு அளவிடற்கரிய துன்பங் களையும் துயரங்களையும் விளைவித்திருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வெளியே வாழும் அம்மாநிலத்தைச்  சேர்ந்தவர்கள், தங்கள் சொந்த பந்தங்களுடன் தொடர்பு கொள்ளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கல்வி நிலையங்களில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து எவ்விதமான நிதி உதவி யையும் பெற முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கி றார்கள். மருத்துவ சிகிச்சை பெற்றுவரும்  நோயாளிகள் தங்களுக்குத் தேவையான மருந்துகளைப் பெற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடை முறைப்படுத்தப்பட்டுள்ள தகவல்-தொடர்புத் தடையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அதன் மூலம் எங்கள் சகக் குடிமக்கள் படும் அவதிகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் அவர்களை விடுவித்திட வேண்டும் என்றும் அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தங்கள் அறிக்கையில் கோரி யுள்ளனர். இந்த அறிக்கையில், ராம் ரஹ்மான், அனில் சந்திரா, நாசிர் தியாப்ஜி,  சானியா ஹாஷ்மி, ராஜேந்திர ஷர்மா, விவன் சுந்தரம், அருண்குமார் எச்.ஜி., ஜாவேத் மாலிக், நீரஜ் மாலிக், தபதி குஹா-தாகூர்தா, இந்தர் சலீம், ரோமிலா தாபர், அர்ச்சனா பிரசாத், என். புஷ்ப மால், சிந்து திருமலைசாமி, இர்பான் ஹபீப், பிரபாத் பட்நாயக், மாலாஸ்ரீ ஹாஷ்மி உட்பட 84 பேர் கையொப்பமிட்டிருக்கிறார்கள்.
 

;