tamilnadu

img

பொருளாதார மந்த நிலை இந்தியாவில் கடுமையாகும்!

புதுதில்லி:
நடப்பாண்டில் உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என்பதால், அதன் தாக்கம் இந்தியாவிலும் மிக கடுமையாக இருக்கும் என்றுசர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர்கிறிஸ்டலினா ஜார்ஜிவா எச்சரிக்கை விடுத்துள் ளார்.
அமெரிக்காவின், வாஷிங்டனில் இருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) தலைமையகத்தில், கிறிஸ்டலினா ஜார்ஜிவா நிகழ்ச்சி ஒன்றில்பேசியுள்ளார். அப்போது, “ஒருங்கிணைந்த மந்த நிலையை, உலகப் பொருளாதாரம் தற்போது சந்தித்து வருகிறது. நடப்பு 2019 - 20 நிதியாண்டில், 90 சதவிகிதநாடுகள் பொருளாதார மந்த நிலையை சந்திக்கும். தற்போதைய மந்த நிலைக்கு பிரெக்சிட் மற்றும் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் ஆகியவைதான் காரணம். இதன்மூலம், உலக அளவில், பொருளாதார வளர்ச்சி விகிதமானது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறையப் போகிறது” என்று தெரிவித்துள்ளார்.குறிப்பாக, “பிரேசில், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், நடப்பாண்டில் பொருளாதார மந்த நிலை மிக கடுமையாக இருக்கும்” என்று கூறியுள்ள கிறிஸ்டலினா ஜார்ஜிவா, “மந்த நிலையைத் தவிர்க்க வேண்டும் என்றால், உலக நாடுகள் ஒன்று சேர்ந்து வர்த்தகத் திறனைப் பெருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

;