tamilnadu

img

தினமும் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை...  மோடியின் மாடலான குஜராத் கொரோனாவின் ஊற்றுக்கண் ஆகிறது...  

ராஜ்கோட்
இந்தியாவில் கொரோனா அதிகமாக உள்ள மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில் இதுவரை 1.16 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,244 பேர் பலியாகிய நிலையில், 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து விடுபட்டுள்ளனர். 
நாட்டின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் குஜராத் 12-வது இடத்தில் இருந்தாலும் பலி எண்ணிக்கையில் 7-வது இடத்தில் உள்ளது. அதுவும் குறைந்த பாதிப்பில். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உ.பி. தில்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்திற்கு மேல். அங்கு பலி எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கு மேல் இருப்பதில் ஒரு காரணம் உண்டு. 

ஆனால் குஜராத்தில் கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை கூட தாண்டவில்லை. அங்கு பலி எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவிற்கு 3 ஆயிரத்தை தாண்டி பயணித்து வருகிறது. குறிப்பாக குஜராத்தின் முக்கிய நகரங்களான அகமதாபாத், ராஜ்கோட்டில் கொரோனா பலி  எண்ணிக்கை மிகவும் அதிகம். அகமதாபாத் நகரில் மட்டும் இதுவரை 1,765 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜ்கோட்டில் கொரோனா பலி எண்ணிக்கையில் திடமான தகவல் இல்லையென்றாலும், கடந்த 2 நாட்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் கடந்த 3 வாரங்களில் மட்டும் ராஜ்கோட்டில் 1000-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்திருக்கலாம் என உள்ளூர் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.  

மோடி பிரதமர் பதவியை ஏற்க தனது பிரச்சாரத்தில் குஜராத்  மாடல் என அங்குள்ள ஆடம்பர நிகழ்வுகளை காட்டி ஆட்சிக்கு வந்தார். ஆனால் மக்களுக்கு தேவையான மருத்துவம், போக்குவரத்து போன்ற வசதிகள் இல்லாத மோசமான மாடல் தான் மோடியின் குஜராத் மாடல் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  

;